பக்கம்:இரு விலங்கு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


£3 இரு விலங்கு

சொல்வார்கள். செயல் செய்யும் கருவிகளாகிய கை, கால், நாக்கு, எருவாய், கருவாய் என்னும் ஐந்தையும் விட அறிவுக் கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் சிறந் தவை. அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பன. இந்த ஐந்திலும் கண் தக்லமையானது. "சர்வேந்த்ரியாளும் நயனம் ப்ரதானம்' என்று சொல்வார்கள். மனிதனுக் குப் பிற இந்திரியங்கள் அவ்வளவு சிறப்பாக இருந்தா லும் இல்லாவிட்டாலும் கண் இல்லாவிட்டால் பயன்

'கண்ணிற் சிறந்த உறுப்பு இல்ல்ே' என்று பாடுவார் புலவர். திருக்குறளில்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலே'

என்று வருகிறது. இறைவனே உடம்பில்ை வழிபாடு செய்யவேண்டுமென்ற கருத்தை அதில் வள்ளுவர் சொல் கிருர் அதற்கு உரை எழுத வந்த ப ரி மே ல மு. க ர், காணுத கண் முதலியனபோல வ ண ங் காத தலேகள் பயனிலவெனத் தலைமேல் வைத்துக் கூறினர் என்று. எழுதியுள்ளார். ஆதலின் பொறிகளுக்குள் சிறந்தது கண் என்றும், அதனுல் இறைவனேக் காண்பதே பெரும் பயன் என்றும் தெரிய வருகிறது. . -

ஒருவனுடைய கண் அழகாக இருந்தால் அவனு டைய திருமேனிக்கே அழகு அமையும். பிறர் பார் க் க. அழகாக இருக்கும் கண் வேறு. பிறரைப் பார்க்கும் ஆற்றலே யுடைய கண் வேறு. இரண்டையும் படை த் திருந்தால் சிறப்பு உண்டாகும். கண்ணுல் பார்க்கின்ற பொருள்களுக்குள்ள சிறப்பை எண்ணி அந்தப் பார்வைக் குச் சிறப்பு அமைகிறது, கண்வலி உடையவர்கள் பச்சை யான பொருள்களைப் பார்க்கவேண்டுமென்று சொல்வார் கள். காணத் தகாத விபரீதமான காட்சியைக் கண்டவர் கள் உடனே பச்சை மரத்தைக் காணவேண்டுமென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/44&oldid=539422" இருந்து மீள்விக்கப்பட்டது