பக்கம்:இரு விலங்கு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாலாயிரம் கண் 23

சொல்வது உண்டு. ஆகவே கண்களால் பார்ப்பதற்குச் சிறந்தவை என்று பல பொருள்கள் உண்டு. அவற்றுள் மிகச்சிறந்தது ஆண்டவனுடைய திருவுருவம். இறைவன் தனக்கென்று உருவமும், குணமும் இல்லாதவன். ஆனல் அவன் ஆருயிர்களைக் காப்பாற்றவேண்டுமென்ற பெரும் கருணே உடையவன். அவர்களே எல்லாம் இங்கு அகற்றி நல்ல நிலையில் வைக்கவேண்டுமென்ற கருணை அவனுக்கு இருக்கிறது. அவளுேடு நாம் தொடர்பு ைவ த் து க் கொள்ள வேண்டுமானல் அவன் நம் கண்ணுக்குப் புலன காமல் அறிவுக்குப் புலனாகாமல் இருந்தால் இயலாது. ஆதலின் நமக்கு அருள் செய்ய வேண்டித் திவ்யமங்கள உருவம் படைத்து எழுந்தருளுகிருன். மிகச் சி ற ந் த அன்பர்களுடைய உள்ளத்திலே தன்னுடைய திருவுருத் தைத் தோற்றுவிக்கிருன். அருள் கண்ணுல் பார்க்கின்ற அந்தப் பெரியவர்கள் தாம் கண்டவற்றை மற்றவர்களுக் குச் சொல்கிரு.ர்கள்: - х

குறியும் குணமும் ஆகமங்களும் சாத்திரங்களும் அந்தப் பெருமானு டைய திருவுருவத்தைச் சொல்கின்றன. அவற்றையெல் லாம் வைத்துக்கொண்டு இறைவனுடைய திருக்கோலங் களைக் கல்லாலும், செம்பாலும் செய்துவைத்துச் கோயி லில் பூசிக்கிரு.ர்கள். மந்திரங்களால் அவற்றுக்குத் தெய் வத் தன்மையை ஏற்றுகிருர்கள். பலவகை வ ழி பா டு களைச் செய்கிருர்கள் மூல மூர்த்தியோடு பல்வேறு மூர்த்திகளையும் திருவிழாவுக்குரிய உற்சவ முர்த்திகளாக அமைக்கிருர்கள் மனிதன் கண்ணுடையவகை இருப்ப கால் அந்தக் கண்ணுல் காண்பதற்காக இத்தன கோலங் களேயும் அமைத்திருக்கிருர்கள். தனக்கென்று கு ண ம் இல்லாத ஆண்டவன் மூன்று குணங்களின் வசப்பட்ட ஆத்மாக்களைக் காப்பாற்றவேண்டி எட்டுக் குணங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/45&oldid=539423" இருந்து மீள்விக்கப்பட்டது