பக்கம்:இரு விலங்கு.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாலாயிரம் கண் 2?

உடனே காது செவிடுபடும்படி வெடிக்கும். வெடிக்க வேண்டுமானுல் அந்தக் குழாயில் வெடி மருந்தைக் கெட்டித்திருக்கவேண்டும். பின்பு வெளியே நீட்டிக்கொண் டிருக்கும் திரியில் தி வைக்கவேண்டும். மருந்து அடைக் காமல் இருந்தால் தீ வைத்தால் வெடிக்காது. மருத்து அடைந்திருந்தாலும் தி வைக்காவிட்டால் வெடிக்காது. தீயும் அவசியம்; வெடிமருந்தும் அவசியம். இப்போல இருப்பதுதான் ஆண்டவனுடைய திருக்கோலம். வெடி மருந்து பக்தர்களுடைய நிலை. நம்மிடத்தில் பக்தி என்ற வெடி மருந்து இருந்தால்தான் ஆண்டவன் தரிசனம் ஆனந்த உணர்ச்சியை உண்டாக்கும் அது இல்லாத போது நம்முடைய மனம் கட்டையாக, கல்லாய் இருக்கும்: .

மணிவாசகர் அப்படியே சொல்கிருர், "உன்னுடைய திருவருளால் நான் பெற்ற அதுபவம் பல. உன்னுடைய அருளேப் பெருமல் வாடுகின்றவர்கள் பலர் பலபடியாகத் தவம் செய்து கொண்டு வாடுகிருர்கள். அப்படி இருக்கும் நீ எனக்கு எளியவகை வந்து அருள் செய்தாய். உன் னுடைய அருளைப் பெறுவதற்கு முன்பாக நான் நைந்து உருகி இருக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை, உன் திருவருகிளப் பெற்ற பிறகும், அந்த அருள் எளிதில் கிடைப்பதன்று என்று உணர்ந்த பிறகும், நான் உரு காமல் இருக்கிறேன். உடம்பெல்லாம் கண்ணுக, அடி முதல் தல்வரையிலும் நெஞ்சாக இருந்து உருகிக் கண்ணிர் விடவேண்டும். அப்படி இல்லாமல் இப்போ துள்ள ஒரு நெஞ்சமும் கல்லாக இருக்கிறது. இண்ரடு. கண்ணும் மரமாக இருக்கின்றன’’ என்று புலம்புகிருர்,

வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ளுேர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய் பள்ளம்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்

பதைத்துருகும் அவர் நிற்க என்ன ஆண்டாய்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/49&oldid=539427" இருந்து மீள்விக்கப்பட்டது