பக்கம்:இரு விலங்கு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3() இரு விலங்கு

என்று தொடங்குகிருர் அருணகிரியார். மக்களில் அழகு நிரம்பியவர்கள் இருக்கிறார்கள். இயற்கையாக அழகு உடையவர்கள் ஆடையும் அணியும் புனேந்து கொண் டால் பின்னும் அழகாகத் தோற்றுவார்கள். எவ்வளவு அழகு உடையவர்களாக இருந்தாலும் தங்களே அலங் கரித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை யாரையும் விடுவது இல்லே. அழகு மிக்க பெண்கள் தாம் மேலும் மேலும் பல பண்டங்களால் அழகை மிகுதிப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற ஆசையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த நவீன நாகரிக காலத்தில் எங்கே பார்த்தாலும் அழகு செய்யும் கருவிகள் மலிந்திருக்கின்றன.

ஒரு மனிதன் தன்னே ப் பல்வேறு சமயங்களில் பல் வேறு வகையில் அலங்கரித்துக் கொள்வான். அவனு டைய அலங்காரத்தில் மிகவும் சிறந்தது அவன் திருமணக் கோலத்தில் இருக்கும்போது அமைகிறது. ஒருவன் அலங்காரம் செய்து கொண்டிருந்தால், 'மாப் பிள்ளை மாதிரி இருக்கிறது' என்று சொல்வது உலக வ முக்கம். திருமணக் கோலத்தில் மாப்பிள்ளையாக இருக்கும் போது இயற்கை அழகும், செயற்கை அழகும் பொருந்தி விளங்குவது ஆண்மகன் இயல்பு.

முருகன் பேரழகன் என்பதைச் சொல்ல வருகிருர் அருணகிரியார், அவன் மாப்பிள்ளைத் துரை என்று சொல் கிறார். யாருக்கு மாப்பிள்ளை அழகுக்குச் சிறந்த பெரு மாளுகிய திருமாலின் மாப்பிள்ளே அவன் திருமாலும், திருமகளும் அழகுத் திருவுருவங்கள். அழகான மாமன. ருக்கும், அழகான மாமியாருக்கும் மாப்பிள்ளையாக வந்தவன் முருகன். மாப்பிள்ளேக்கும், பிள்ளைக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தகப்பன் அழகாக இருந்தால் பிள்ளையும் அழகாகத்தான் இருக்க வேண்டுமென்ற வரையறை இல்ல், இயற்கையிலே அமைவது உரு; ஆகையால் அழகான பிள்ளையைத்தான் பெறவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/52&oldid=539430" இருந்து மீள்விக்கப்பட்டது