பக்கம்:இரு விலங்கு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாலாயிரம் கண் 31

மென்று நினேத்துப் பெற முடியாது. ஆனல் பெண்ணேப் பெற்றவர்கள் தம்முடைய முயற்சியினல் அழகான மாப் பிள்ளையைத் தேடிக்கொள்ளலாம். ஆகவே அழகான மாமியாரும், அழகான மாமருைமாகிய திருமகளும் திரு மாலும் தம்முடைய அழகான குழந்தைகளான தேவ சேனேக்கும், வள்ளிக்கும் அழகான மாப்பிள்ளேயாகிய ஒருத்தனேத் தேடிக்கொண்டார்கள். அவன்தான் முருகன். அவன் உரிமையுள்ள மாப்பிள்ளே, திருமாலுக்கு மருகன். உரிமையும், அழகுப் பெருமையும் உடைய மாப்பிள்ளே என்பதை,

மாலோன் மருகனை

என்பதல்ை நினைவூட்டுகிருர் அருணகிரியார். அழகான மாமருைக்கு மருமகப் பிள்ளேயாக இருக்கிற அமுகன் திருச்செங்கோட்டில் இருக்கிருன். அவன் கண்ணுலே காண்பதற்குரிய திருக்கோலம் படைத்திருக்கிருன் என்ப தைச் சொல்ல வருகிருர். ஆகையால் இங்கே குரசங் காரம் செய்த பெருமான் என்ருே, ஞான பண்டித சாமி என்ருே சொல்லவில்லே. அவன் அமுகன் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் வருணனை செய்யத் தொடங்குகிருர், - -

மன்ருடி மைந்தன்

இனி அடுத்தபடி சிவபெருமானுடைய பிள்ளே என்று சொல்ல வருகிருர், பல இடங்களில் சிவபெருமானுடைய மைந்தன் முருகன் என்பதைப் புலப்படுத்தியிருக்கிருர், முதல் பாட்டிலேயே, - -

- 'செஞ் சடாடவிமேல்

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்.' - என்ருர், அப்படிச் சொல்லும்போதெல்லாம் ஏதாவது: குறிப்பை வைத்தே சிவபெருமானே அவர் வருணிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/53&oldid=539431" இருந்து மீள்விக்கப்பட்டது