பக்கம்:இரு விலங்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

33


வருக்கும் மேலான தலைவனாக இருக்கிறவன்' என்று வானவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகையால் வானவர் களுக்கும் மேலான தேவன் என்று சொன்னார். சிவபெரு மானுக்கு மகாதேவன் என்று ஒரு பெயர்.

"தேவர்கோ அறியாத தேவ தேவன்"

என்று மணிவாசகர் பாடுகிறார். அவன் தேவர்களில் ஒருவனாக வைத்து எண்ணப்படுபவன் அல்லன். அவர் களால் அறியப்படாமல், அவர்களுக்கு மேலே அவர்களு டைய தலைவனை அறிய முடியாதவனாம், முருகனும் அத்தகையவனே.

 அவர்களுடைய சேனைத் தலைவனாக, அவர்களில் ஒருவனாக, ஆண்டவன் இருந்தான். அந்தக் கதையைக் கொண்டு யாராவது முருகன் தேவர்களுக்குள் ஒருவன் என்று எண்ணி விட்டால் என்ன செய்வது என்ற நினைப் பினால், அவனை 'வானவர்களுக்கும் மேலான தேவன்' என்று இங்கே சொன்னார் .

மெய்ஞ்ஞான தெய்வம்

 ண்டவன் அழகுத் தெய்வம். அழகு பொருந் தி ய வ ர்களோடு உறவு உடைய தெய்வம் தேசு பொருந்திய திருமேனி படைத்த தேவர்களுக்குத் தலைவன் என்று சொன்ன பிறகு, 

மெய்ஞ்ஞான தெய்வத்தை

என்று சொல்கிறார். வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் சிறப்பு அமையாது. ஆண்டவன் ஞான சொரூபமாக இருக்கிறவன். தன் புறக்கோலத்தைக் கண்டு இன்புறுகிறவர்களுக்கு அகத்து ஒ ளி யா கி ய ஞானம் புலனாகும்படி செய்கிறவன் முருகன். ஞானத்தில் பல வகை உண்டு. பொதுவாக அறிவு என்று சொல்வ

இரு-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/55&oldid=1402468" இலிருந்து மீள்விக்கப்பட்டது