பக்கம்:இரு விலங்கு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 இரு விலங்கு

தையே ஞானம் என்று சொல்லுவார்கள் பாஷா ஞானம் என்று சொல்கிருேம்; சங்கீத ஞானம் என்று சொல் கிருேம். இவை எல்லாம் உலகத்தோடு பொருந்திய கல்வியறிவு: இந்த ஞானங்கள் எல்லாம் நிலையாக நிற் பது இல்லே. ஆன்ம அநுபவத்திற்கு உதவும் ஞானம் எதுவோ அதுதான் மெய்ஞ்ஞானம், அதனே மெய்யறிவு என்று சொல்வார்கள். இந்த அறிவே வடிவமாக, மெய்ஞ் ஞானம் தரும் வள்ளலாக விளங்குகிறவன் முருகன். ஆதலின் அவனிடம் புற அழகோடு அக அழகும் சிறந்து நிற்கின்றது. அவனுடைய புறஅழகைக் கண்டவர்களுக்கு மோகம் பிறவாது; ஞானம் உண்டாகும். ஆதலின் முன்னே அவனுடைய அழிகின் பெருமையைச் சொன்ன வர், அதன் விகளவாக வரும் ஞானத்தை இங்கே சொல் கிருர், இவ்வளவும் சொன்ன பிறகு முருகனுடைய பெருமை தெரிகிறது. அதோடு அவனுடைய அருமை யும் தெரிகிறது. . . . . .

மேதினியில்

திருமால் மிகப் பெரியவர் வைகுண்டத்தில் இருப் பவர். சிவபெருமானே கைலாயத்தில் இருப்பவர், அந்த இரண்டு பேரும் மிகவும் எளியவர்களாக வருபவர்கள் அல்ல. அவர்களுக்கு உறவினன் முருகன், தேவர்கள் நம்மைக் காட்டிலும் பெரியவர்கள். மேலுலகத்தில் இருப் பவர்கள். அவர்களுக்கு எல்லாம் மேலானவகை உயர்ந்த நிலயில் இருப்பவன் அவன். அப்படியாயின், அவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு அவனே நாம் காணமுடியுமா? இப்போது சொன்னவற்ருேடு நிறுத்திவிட்டால் இத்தகைய ஐயங்கள் நிகழும். அதைப் போக்கத் தொடங்குகிருர் அருணகிரி யார். அவன் திருச்செங்கோட்டில் வந்து எழுந்தருளி யிருக்கிருன் கிடைத்தற்கரிய ஒரு பொருள் -மிக மிகச் சிறந்த பொருள்-நாம் சென்று அடைவதற்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/56&oldid=539434" இருந்து மீள்விக்கப்பட்டது