பக்கம்:இரு விலங்கு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 இரு விலங்கு

சென்று அடைவதற்குரிய ஊரில், கண்ணுலே காணு கின்ற நிலேயில், கையால் தொழுகின்ற திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிருன். இந்த வாய்ப்பு நமக்குக் கிடைத் திருக்கும்போது நாம் அங்கே போகவேண்டாமா? இத் தகைய எண்ணம் வரவே அருணகிரியார் -

சென்று கண்டு தொழ

என்கிருர்:

காணும் காட்சி

இங்கே செல்வதும் காண்பதும் தொழுதலும் ஆகிய செயல்களைச் சொல்கிருர். செல்வதற்குரியன கால்கள். காண்பதற்குரியன கண்கள். தொழுவதற்குரியன கைகள். திருச்செங்கோடு சென்று, மலேயின் மேலே ஏறி, திருக் கோலத்தைக் கண்டு, கை கூப்பித் தொழவேண்டும். அப்படித் தொழும்போது தமக்குள்ள குறை இன்னது என்று தெரிந்துகொண்டு வருந்துகிருர் அருணகிரியார்.

சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே!

செல்வதற்கு நாலாயிரம் கால்களும், காண்பதற்கு நாலா யிரம் கண்களும், தொழுவதற்கு நாலாயிரம் கைகளும் பிரமன் படைக்கவில்லேயே என்று சொல்லியிருக்கலாம். ஆனல் இங்கே ஆண்டவனேக் காண்பது கல்மையான செயல். அது மாத்திரம் அன்று கால் உடையவன் நடந்து செல்கிருன் நடந்து செல்வதற்கு உறுதுணே யாகக் கண் பார்க்கவேண்டும். ஆகவே வழி தெரிந்து நடப்பதற்குக் கால் மாத்திரம் இருந்தால் போதாது; கண்ணும் வேண்டும். இறைவனைத் தரிசனம் செய்து கையினலே தொழ வேண்டுமானலும் அதற்கும் கண்

வேண்டும் நடத்தல், காணுதல், தொழுகல் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/58&oldid=539436" இருந்து மீள்விக்கப்பட்டது