பக்கம்:இரு விலங்கு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 இரு விலங்கு காண்பார். அவன் பேரழகில் ஈடுபடுவார். அப்போது இவர் முகத்தில் ஆயிரம் கண்கள் இருந்தால் நன்ருக இருக்கும், என்று முன்பே எண்ணிப் பிரமன் படைத்திருக் கலாம். இந்த எண்ணத்துடன் அவன் விரிவாகப் படைக்கப் புகுந்தால் ஒவ்வொரு முகமும் அதற்கேற்ற இரண்டு கண்களும் வேலே செய்யத் தொடங்கும். ஒவ்வொரு முகப் பக்கமும் ஆயிரம் கண்களைப் படைத் தால் நான்முகங்களிலுைம் விரைவாகப் படைக்கின்ற அவன் நாலாயிரம் கண்களைப் படைத்திருக்கலாமே என்ற நினைவோடு சொல்கிருர், ஒரு முகம் இரண்டு கைகளோடு அவன் படைப்பதாக இருந்தால் ஆயிரம் கண் வைக்க முடியும்; நான்கு முகத்தையும், எட்டுக் கரங்களையும் கொண்டு விரைவாக அவன் படைக்கப் புகுந்தால் நான்கு பக்கத்திற்கும் நாலாயிரம் கண் படைத்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு அவர் பேசுகிருர் என்று தோன்றுகிறது. 'நான்கு முகம் உடையவன் ஆதவின் நாலாயிரம் கண் படைத்திருக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது என்பது,

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று பிரமனே முகத்தின் எண்ணிக்கை கொண்டு சுட்டு வதால் தெரிய வருகிறது - - பேரழகை உடைய ஆண்டவன், தேவர்களுக்குத் தலைவன். மேலானவளுகிய முருகன், சிவபெருமானுக்கு மைந்தன், மெய்ஞ்ஞான தெய்வம் ஆகிய அவன் மிகப் பெரியவகை இருந்தாலும் அவன் அகத்தும் புறத்தும் ஈரம் மிக்க திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கிருன் அவன் இயற்கையாக உள்ள இடத்திற்குச் சென்று கண்டு தொழுவது நமக்கு அரிதாகையில்ை அவன் நம்மை நோக்கி இந்த மேதினிக்கே வந்திருக்கிருன். ஆனாலும் ஒரளவு முயற்சி செய்தால்தான் பெறுகின்ற பொருளின் பெருமையும் மதிப்பும் தெரியும். அவன் இயல்பாக இருக் கும் இடத்திற்குச் சென்று காண்பதற்கு நமக்கு ஆற்றல் இல்லாவிட்டாலும், அவன் பாளையம் இறங்கிய இடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/60&oldid=539438" இருந்து மீள்விக்கப்பட்டது