பக்கம்:இரு விலங்கு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 இரு விலங்கு

என்று சொல்லி அடையாளமாக அமைத்துக் காட்டிய திருவுருவங்கள் அவை, ஒருவனுடைய போட்டோப் படத்தைப் பார்ப்பது போலத்தான் அந்தத் திருவுருவங். களைக் கண்டு நாம் பூசை செய்கிரும். அவனுடைய திரு நாமம் அத்தகையது அன்று. அவனுடைய நாமம் வேருெரு நாமத்தின் அடையாளம் அன்று. சாக்ஷாத் நாமமே அது. உலகத்தில் உள்ள சமயங்களில் சில வற்றைச் சார்ந்தவர்கள் அவனுக்கு உருவம் இல்க்ல யென்று சொல்வார்களேயன்றிப் பெயர் இல்லையென்று சொல்வதில்லே. அல்லா, பரம பிதா என்று சொல்லாமல் இருக்க இயலாது. இந்த வகையிலும் ஆண்டவனுடைய உருவத்தைக் காட்டிலும் திருநாமம் சிறந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

- மற்ருென்று நாம்வணங்கும் ஆண்டவனுடைய திரு வுருவங்களேக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துக் கோயில் கட்டியிருக்கிருர்கள். அந்தக் கோயில் சில சில காலங் களில்தான் சென்று வழிபடுவதற்குரியது: அதற்கென்று ஒரு காலமும், இடமும் அமைந்திருக்கின்றன. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவன் திருவுருவத்தைக் கண்ணுல் கண்டு தரிசிப்பது இயலாது. நம்முடைய வீட்டில் பூசை செய்வதற்கு வைத்திருந்தாலும் அதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் வைத்துக்கொள்ள முடியும். நாம் வேறு இடங்களுக்குச் சென்றிருந்தால் அந்த இடங்களில் அதைக் காப்பதற்கு வாய்ப்பு இராது) இறைவனுடைய திருநாமம் அத்தகையது அன்று. எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் அதைச் சொல்லலாம்; அவன் புகழை வாழ்த்தலாம். எப்போது எப்போது நமக்கு ஒய்வு இருக்கிறதோ அப்போதெல் லாம் திருநாமத்தைச் சொல்லலாம்; திருப்புகழைப் பாட லாம். ஆகையால் அவனுடைய திருவுருவத்தைத் தரிசிப் பதைவிட அவன் புகழை வாழ்த்துவது எளிதானது; பயனும் உடையது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/64&oldid=539442" இருந்து மீள்விக்கப்பட்டது