பக்கம்:இரு விலங்கு.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 இரு விலங்கு

வள்ளிநாயகியை அவன் திருமணம் செய்துகொண் டான். அப்பெருமாட்டி ஒரு மானுக்கு மகளாகத் திரு அவ தாரம் செய்தாள். செம்மான் மகளாகத் திகழ்ந்தாள். திருமகள் அம்சம் பெற்றது அந்தச் சிவந்த மான். கரிய திருமாலினுடைய மருகனக இருக்கிறவன் சிவந்த திரு மகளாகிய மானின் மகளைக் கல்யாணம் செய்துகொண் டான். அவன் எப்படி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை இதில் சொல்கிரு.ர். -

வள்ளியைக் களவுகொண்டவன்

கருமால் மருகனச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆகுலவன.

ஆகுலம் - கவலே. வள்ளி நாயகியைத் திருட்டுத்தன மாகவாவது எடுத்துச் செல்ல வேண்டும்!’ என்ற கவலே முருகனுக்கு இருந்தது. நேர்மையாக அவளுடைய தந் தையை அணுகி, 'எனக்குத் திருமணம் செய்துகொடு' என்று ஆண்டவன் கேட்கவில்லே. தினேப் புனத்தில் தினே காத்துக்கொண்டிருந்த வள்ளி நாயகியிடம் த ன் சீன மறைத்துக்கொண்டு சென்ருன். திருடர்கள் எப்போதும் தம்முடைய உருவத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். முருகன் வேடகைவும், கி.முவ கைவும், வேங்கை மரமாகவும் தன்னுடைய கோலத்தை மாற்றிக்கொண்டான். திருடன் செய்கிற காரியம் இது. பொருளுக்குரியோர் அறியாமல் அந்தப் பொருளே எடுத்துச் செல்வதுதான் களவு. வள்ளிநாயகியை வள்ளி மலேக்கு அரசனகிய நம்பி ராஜன் வளர்த்து வந்தான். கண்ணே இமை காப்பது போல அவளேக்காப்பாற்றினுன் தன்னுடைய மகள் என்று எண்ணி நலங்கள் செய்தான். அவனேயும் அறியாமல் திருட்டுத்தனமாக முருகப்பெரு ழான் வள்ளியுெம்பெருமாட்டியை எடுத்துச் சென்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/66&oldid=539444" இருந்து மீள்விக்கப்பட்டது