பக்கம்:இரு விலங்கு.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிால நன்று 45

ஆகையால் அது திருட்டு ஆயிற்று. அப்போது வள்ளி நாயகியை எப்படியாவது அடைய வேண்டுமென்ற வியா கூலம் அவனுக்கு இருந்ததாம்.

வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி வியாகுல மனத்தினெடு போம்விற்காரனும்:

என்று திருவகுப்பில் வருகிறது. நாரதர் கூறிய சொற் படியே வள்ளி நாயகியை அடையவேண்டும் என்ற வியா கூல மனத்தோடு உருமாறிப் போைைம். வள்ளி நாயகி யை ஆட்கொள்வதற்காகச் செய்த திருவிளேயாடல் இது. அந்தப் பிராட்டிக்கு முருகனே அடையவேண்டு மென்ற காதல் இருந்திருக்கலாம். அது வெளிப்படையாகத் தெரியவில்லை. அவளே ஆட்கொள்ள வேண்டுமென்ற கவலே மிகுதியாக முருகனுக்கு இருந்தது. முருகனுடைய பெருங் கருணையை இந்தத் திருவிளேயாடல் காட்டுகிற தென்பதைப் பலமுறை பார்த்திருக்கிருேம். இறைவனே வலிய வந்து தன்னே ஆட்கொள்ளும் பேறு வள்ளியம் பெருமாட்டிக்குக் கிடைத்தது.

குரங்கும் பூனையும்

- குரங்குக்கும் பூனக்கும் ஒரு வகையில் வித்தியாசம் -

உண்டு குரங்கு தின் குட்டிய்ைப் பற்றிக்கொள்ளது. குட்டியே தாய்க் குரங்கைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

மரத்திற்கு மரம் தாய் தாவும்போது குட்டி சிறிதும் சோர் .

வில்லாமல் தாயைப் பற்றிக்கொண் டிருக்கும் பற்றிக் கொள்ளாமல் பிடியை விட்டுவிட்டால் அந்தக் குட்டி யையே கொன்றுவிடும் என்று சொல்வார்கள் . ஆனல் பூனேயோ அப்படி அன்று. பூனேக் குட்டிக்குக் கவலே சிறிதும் கிடையாது. தாய் எங்கே ப்ோலுைம் தன்னு டைய குட்டியைத் தன் வாயில் கெளவிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/67&oldid=539445" இருந்து மீள்விக்கப்பட்டது