பக்கம்:இரு விலங்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இரு விலங்கு

 முருகப்பெருமான் தமிழ் நாட்டினரால் போற்றப் படும் தெய்வம்; தமிழர் வாழ்விற்குச் சிறப்பு அருளும் பெருமான். அவன் களவு மணம், கற்பு மணம் ஆகிய இரண்டையும் செய்து கொண்டருளினான். தேவயானை யைக் களவின் வழி வாராத கற்புத் திருமணம் செய்து கொண்டான். இந்திரனும் தேவர்களும் தேவயானையை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆண்டவனிடம் வேண் டிக்கொள்ள, அவன் அந்தப் பெருமாட்டியைத் திருப்பரங் குன்றத்தில் திருமணம் செய்து கொண் டா ன். இந்த வரலாறு கந்த புராணத்தில் வருகிறது. இந்த மணம் கற்பு மணம்.

வள்ளி மணம் களவு மணம்

 மிழ்ப் பெருமாட்டியாகிய வள்ளிநாயகியை மணம் செய்துகொண்டது களவுக் காதல் முறை. அடுப்பாரும், கொடுப்பாரும் இல்லாமல் தானே வலிந்து சென்று அந்தப் பெருமாட்டியிடம் முருகன் காதல் செய்தான். ஆதலின் தமிழ் மரபுக்கேற்ற வகையில் அது அமைந்தது. தந்தையார் இலக்கணம் செய்யப் பிள்ளையாகிய முருகன் இலக்கியமாக நின்றான். இந்தச் செய்தியைப் பழைய சங்க நூலாகிய பரிபாடலில் உள்ள ஒரு பாட்டிலே காணுகிரறோம். 
 பரிபாடலில் முருகனைப் பற்றிய பல பாடல்கள் உண்டு. திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமான் பெருமையைச் சொல்கிற பாடல்களில் ஒன்று, வள்ளிநாயகியின் திருமணப் பெருமையைச் சொல்கிறது. அது இப்போதுள்ள பரிபாடல் பதிப்பில் 9-ஆவது பாட லாக அமைந்திருக்கிறது. அந்தப் பாடலில் ஒரு காட்சி வருகிறது. பரிபாடலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் அங்கே, 'கைகோள் இரண்டிற்கும் உரிய தேவியார் காதலிக்கப்பாடு கூறி வாழ்த்தி, மேல் வள்ளியது சிறப்பும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/70&oldid=1298518" இலிருந்து மீள்விக்கப்பட்டது