பக்கம்:இரு விலங்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

49


அவன் பரங்குன்று அவட்கு ஒத்தவாறும் கூறலுறுவார். நான்மறைப் புலவரை நோக்கித் தமிழது சிறப்புக் கூறு வாராய்ப் பொதுவகையான் அவற்றிற்குக் காரணம் கூறு கின் றார்' என்று முன்னுரை எழுதுகிறார்.

 நான்மறை வல்ல புலவருக்குப் பிரமம் முதலிய எட்டு வகைத் திருமணங்கள் தெரியும். அவற்றில் ஒன்று காந்தர்வ விவாகம், அது போன்றது களவு மணம் என்று சொல்வார்கள். காந்தர்வ மணத்தைவிடக் களவு மணம் பலவகையில் சிறந்தது. களவு மணத்தின் சிறப்பை உண ராத நான்மறைப் புலவர்களுக்கு அதன் பெருமையை உணர்த்தும் வகையில் பரிபாடற் பாட்டு இருக்கிறது.
 களவு மணம் செய்து கொள்பவர்கள் பின்பு நாடறிய வரைந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ்வார்கள். அதைக் களவின் வழிவந்த கற்பு என்பார்கள். அவ்வாறு இன்றி நேரே திருமணம் செய்து கொள்வதைக் களவின் வழி வாராக் கற்பு என்பர். இவ்விரண்டினும் முன்னையது சிறந்தது என்பது தமிழ் மரபு. இதை முதலில் புலவர் சொல்கிறார்.
    "நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
     வாய்மொழிப் புலவீர், கேண்மின்; சிறந்தது 
     காதற் காமம், காமத்துச் சிறந்தது,  
    விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி."  
 'நான்கு வேதங்களை விரி த்து அதன் நல்ல இசையை விளக்குகின்ற வாய்மொழியை உடைய புலவர்களே, கேளுங்கள்; இருவகைக் காமத்திற் சிறந்தது களவுக் காத லாகிய காதற் காமம். அது காதலர்கள் தம்முள் உள்ளம் ஒத்து ஒன்றுபடுவது' என்பது இதன் பொருள்.
 மேலும் அந்தக் களவுக் காமத்தின் சிறப்பைச் சொன்னவர், 
 இரு-4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/71&oldid=1402475" இலிருந்து மீள்விக்கப்பட்டது