பக்கம்:இரு விலங்கு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சால நன்று 芭?

சேவல் முருகப்பெருமானுடைய தனிப்பெருமையைக் காட்டுகிறது. பகைவரை அழித்துக் கொல்லுதல் உல கத்து மன்னர்களுக்கு இயல்பு. ஆனால் இங்கே முருகப் பெருமான் தன்னே எதிர்த்த சூரபன்மனே அடியோடு அழிக்கவில்லை. அவனுடைய உடம்பு இரண்டு பகுதி யாகப் பிரிய ஒரு பகுதியை மயிலாகவும், மற்ருெரு பகுதி யைக் கொடியாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டான்: அவன் திருக்கரத்திலுள்ள சேவல் முருகனுடைய வீரத் தைக் காட்டி அவனேச் சேர்ந்த பகைவர்கள்கூட நன்மை பெறுவார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. சேவகலக் கையில் கொண்டமையால் அவன் பெருவீரன், பெருங் கருணையாளன் என்பதை உணர்கிருேம்.

வேலன் அவன் திருக்கரத்தில் எந்தியுள்ள படைக்கலம் வேல். அந்த வே ல் போரில் புகுந்தால் வெற்றியைத் தரும் தன்மை உடையது. மாமரமாக நின்ற சூரக்னச் செற்றது. அது அவன் முருகப்பெருமானே எதிர்த்து நின்ருன். தேவலோகத்திலுள்ள அமரர்கள் மீண்டும் பழைய வாழ்வு பெற்று உய்யவேண்டுமென்று கருதியே வடிவேற்பெருமான் குரனேடு .ே பா.ரி ட் டான். அவனுக்கும் குரனுக்கும் நேரே பகை ஒன்றும் இல்லே. தன்னிடத்தில் வந்து முறையிட்ட தேவர்கள் பழைய வாழ்வு பெறவேண்டுமென்ற கருத்ணயில்ை தன்னேடு. பொருத குரளுகிய மாமரத்தைச் செற்ருன், அப்படிச் செற்றதற்குக் கருவியாக இருந்தது அவன் கையில் உள்ள. வேல். அது ஞான சக்தி என்பதைப் பலமுறையும் பார்த்து வந்திருக்கிருேம். சேவலேக் கையிலே வெற்றிக் கொடியாக உயர்த்திய எம்பெருமான் பெரிய போரைச் செய்து அந்த வெற்றியை வாங்கித் தந்த வேலாயுதத்தை

ஒரு திருக்கரத்தில் ஏந்தியிருக்கிருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/75&oldid=539453" இருந்து மீள்விக்கப்பட்டது