பக்கம்:இரு விலங்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இரு விலங்கு

பார்க்கும்போது ஒருவகையான பொருளும், உள்ளே புகுந்து பார்க்கும்போது இயல்பான பொருளும் புலப் படச் சொல்வது ஒரு வழக்கம். இங்கே சாதிப் பெயர்கள் சொல்லளவில் தோற்றும்படியாக அருணகிரியார் பாடி யிருக்கிறார். இதைத் தொனி என்று சொல்வதும் உண்டு. சாதிப் பெயர்கள் இந்தப் பாட்டில் தொனிக்கின்றன. ஆனால் இயல்பான பொருளுக்கும் இந்தத் தொனிக்கும் சம்பந்தம் இல்லை. முதலில்,

கருமான் மருகனை.

என்றார். கருமான் என்பது இரும்பு வேலை செய்கின்ற தொழிலாளிக்குப் பெயர்.

செம்மான் மகளை

செம்மான் என்பது தோல்வேலை செய்கிறவர்களுக்குப் பெயர். திருநெல்வேலிப் பக்கத்தில் இன்றும் அந்தப் பெயரால் அழைக்கிறார்கள். சர்மகாரர் என்பதன் திரிபாக இருக்கலாம். கருமானுடைய மருகனை, ஒரு செம்மானுக்கு மாப்பிள்ளையை என்று தொனிக்கும்படி பாடினார். மேலே,

களவுகொண்டு வரும் ஆகுலவனை

என்றார். ஆகுலவன் என்பது ஒரு வகை வேடனுக்குப் பெயர்.

சேவல் கைக்கோளனை

கைக்கோளர் என்பது செங்குந்தர் குலப்பெயர். வேலன் என்பது மலைவாழ் சாதியாரில் ஒருவகையினருடைய பெயர். கருமான், செம்மான், ஆகுலவன், கைக்கோளன், வேலன் என்ற சாதிப்பெயர்கள் இந்தப் பாட்டில் தொனிக்கின்றன.

சாதிப் பிரிவு

 ப்போது சாதிப் பிரிவை ஒழிக்கவேண்டுமென்ற முயற்சி தலைப்பட்டிருக்கிறது; சாதி அபிமானம் இருப்பது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/78&oldid=1298544" இலிருந்து மீள்விக்கப்பட்டது