பக்கம்:இரு விலங்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

57


நல்லதுதான்; ஆனால் சாதிப் பகை இருத்தல் கூடாது என்பது நம்முடைய தலைவர்களின் கருத்து. பழங்காலத் தில் சாதிப் பிரிவினை ஒருவர்மீது ஒருவர் பகை கொள்வதற் காக அமையவில்லை. பெரும் கூட்டமாக இருந்தால் ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது என்று கருதிச் சிறுசிறு குழுக்களாக அமைத்து வேலை செய்வது எல்லாக் காலத் திலும் வழக்கம். எப்போதும் ஒரிடத்தில் சக்தி குவிந் திருப்பதைவிடப் பரவலாக இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். அந்தப் பரவல் முறையை மக்கள் சமு தாயத்தில் மேற்கொண்டு வகுப்பு வகுப்பாகப் பிரித்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் அது ஆக்கத்தைத் தந்தது. இப்போதோ ஒரு சாதி மற்றொரு சாதியைப் பகைக்கிற அழிவு முறை வந்துவிட்டது. பழங்காலத்தில் அந்த அந்தச் சாதிக் கூட்டத்துக்கு என்றே தனி வீதிகள் அமைந்திருக்கும். தொழிலாளியின் மகன் தொழிலாளி யாக இருந்ததனால் அவனுடைய வாழ்க்கையில் மாற்றங் கள் அமைவது இல்லை. பரம்பரை பரம்பரையாக அவ.னுக்கு என்று தொழிலும், அந்தத் தொழிலுக்குரிய நன்மைகளை அநுபவிக்கின்ற உரிமையும் இருந்தன. பொதுவான காரியங்களில் எல்லாச் சாதியினரும் பங்கு கொண்டு உழைத்தார்கள். ஊரிலுள்ள கோயிலில் விழா எடுக்கவேண்டுமானால் ஒவ்வொரு சாதியினருக்கும் வரை யறையாக ஒரு தொண்டு இருக்கும். அதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்துகொண்டு வரு வார்கள். வெவ்வேறு சாதியாக இருந்தாலும் எல்லோ ருக்கும் கோயிலில் உரிமையுண்டு என்ற பெருமையுடன் வாழ்ந்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்ற இந்த முறை அந்தக் காலத்துச் சமுதா யத்தில் இருந்து வந்தது.

 உடம்பில் வெவ்வேறு அவயவங்கள் இருப்பதனால் பல வகையான 

தொழில்களைச் செய்வதற்குரிய வாய்ப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/79&oldid=1402479" இலிருந்து மீள்விக்கப்பட்டது