பக்கம்:இரு விலங்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



vi

 அவருடைய அலங்காரப் பாடல்களையும் அநுபூதிப் பாடல்களையும் கேட்டால் சில சமயங்களில் மேலே சொன்ன ஞானச் செல்வர் தம்மை மறந்து பல மணி நேரம் இருந்து விடுவார். மின்சாரத் தாக்குதலைப் போல அந்தப் பாடல் கள் அவருடைய இதயத்தின் ஆழத்தைப் போய்த் தொட்டு விடும்.
 கந்தர் அலங்கார விரிவுரை நூல்களே ஆழ்ந்து படித்து வாழ்த்தும் அன்பர்கள் பலர் முருகன் திருவருளால் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். வடகுமரை ஶ்ரீ அப்பண்ண சுவாமி களவர்களும் அவற்றைக் கடைக்கணித்து அவ்வப்போது ஆசிகூறிப் பாராட்டியருளுகிறார். அநுபூதிமான் அருணகிரி நாதர் என்பதைப் பல வகையில் சுட்டிக்காட்டும் பகுதிகளை யெல்லாம் அவர் மிக்க உவகையுடன் படித்து இன்புற்று ஊக்கமூட்டுவார். 'பாம்பறியும் பாம்பின் கால்' என்பது போல அருளநுபவத் துறையிலே செல்கிறவர்களுக்கல்லவா அவற்றின் அருமைப்பாடு தெரியும்?
 முருகனைச் சோதிப்பிழம்பாகக் கண்டவர் அருணகிரி நாதர், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார்.

" அருவமும் உருவு மாகி

      அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் 
 பிரமமாய் நின்ற சோதிப்
      பிழம்பதோர் மேனி யாகிக் 
 கருணைகூர் முகங்க ளாறும்
      கரங்கள் பன் னிரண்டும் கொண்டே 
 ஒருதிரு முருகன் வந்தாங்
      குதித்தனன் உலகம் உய்ய  

என்று பாடுகிறார்; சோதிப்பிழம்பு ஒர் மேனியாகி முருகனாக வந்ததாம்.

    " சோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற
          சோகம் அதுதந்து எனை ஆள்வாய்"

என்று அருணகிரியார் வேண்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/8&oldid=1296537" இலிருந்து மீள்விக்கப்பட்டது