பக்கம்:இரு விலங்கு.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டையம் புண்டரிகம்

|

நீர் வேட்டவன்

நெடுநாள் பல இடங்களுக்கும் அலேந்து விடாய்த் தவன் ஒருவன் போன இடங்களிலெல்லாம் நல்ல தண்ணிர் கிடைக்காமல் மிகவும் துன்புற்ருன். அழுக்கான புனலும், உப்பான புனலும், நாற்றமான புனலும் அவனுக்கு அகப்பட்டனவே யன்றி, துாய தண்ணீர் அவனுக்குக் கிடைக்கவே இல்லே நல்ல தண்ணிர் எங்கே கிடைக்கும் என்று அவன் நாடித் தேடிக் கொண்டே இருந்தான். யாரோ ஒருவன் அந்தப் பக்கத்திலே நல்ல தண்ணிர் இல்லேயென்றும், நெடுந்துாரம் சென்ருல் குறிப் பிட்ட ஒரிடத்தில் தெளிவான பொய்கையில் நல்ல தண்ணிர் கிடைக்கும் என்றும் சொன்னன். உணவு கிடைப்பதை விட நீர் கிடைப்பது அவனுக்கு அரிதாக இருந்தது. அதல்ை எப்படியாவது அந்தப் பொய்கை யை அடைந்து விட வேண்டுமென்று அவன் முயற்சி

செய்தான். அந்தப் பொய்கை இருக்கும் இடத்தைத்

தேடிச் சென்ருன். அதைப் பற்றிச் சொல்வார்கள்

யாரேனும்இருந்தால் இன்னும் விளக்கமாக அவர்களிடம்

அந்த வழியைக் கேட்டுத் தேடிச் சென்ருன். அவன் தன் எண்ணத்தில் அந்தப் பொய்கையைப் பற்றிய கற்பனை களே எல்லாம் சேர்த்துக்கொண்டான். யா ரே னும் அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வந்திருந்தால் அவ ரிடம் சில மணி நேரம் உட்கார்ந்து அந்தப் பொய்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/83&oldid=539461" இருந்து மீள்விக்கப்பட்டது