பக்கம்:இரு விலங்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இரு விலங்கு


பற்றிய வருணனைகளைக் கேட்டான். அந்தத் தண்ணிர் தேன்போல இருக்கும் என்றும், மிகவும் குளிர்ந்து இருக் கும் என்றும், உண்டால் பல காலம் தாகமே எடுக்காத வகையில் அது நலம் செய்யும் என்றும் அவர்கள் சொன் ஞர்கள். இப்படி அன்பர்கள் சொல்லச் .ெ சா ல் ல அவனுக்கு மேலும் ஆசை வளர்ந்துகொண்டே வந்தது,

முயற்சியும் அதிகமாயிற்று. .

பொய்கை நீர்

கடைசியில் அந்தப் பொய்கையை அவன் அடைந் தான். அவனேப் போலவே வேறு சிலரும் நல்ல தண்ணிர் கிடைக்காத தொல்லேயினுல் பல இடங்களுக்குச் சென்று அடைந்து கடைசியில் அந்த இடத்திற்கு வந்து சேர்க் தார்கள், நெடுந்து ரத்தில் வரும்போதே அந்தப் பொய்கையிலிருந்து தண்மையான காற்று வீசியது. பல காலமாகக் காணவேண்டுமென்ற ஆசை இருந்தமை யினுல் தெளிவாகத் தெரிந்த அந்தப் பொய்கையை நெடுந்து ரத்தில் காணும்போதே அவன் உள்ளத்தில் உவகை உண்டாயிற்று. நல்ல தண்ணீர் கிடைக்குமா என்று ஏங்கி இருந்தவனுக்கு இப்போது அதனேக் காணுகின்ற பேறு கிடைத்தது. ஒடி வந்தான். அதனே நெருங்கி விட்டான். அதன் அருகிலே சென்று படியில் இறங்கினன். இரண்டு கையிலுைம் மொண்டான். காணும்போதே கண் குளிர்ந்தது. இப்போது அதை மொள்ளும்போது கையும் கு எளி ர் ந் த து. இரண்டு கையிலுைம் மொண்டவன் அப்படியே உண்டான். அவன் இன்பத்தை என்னவென்று சொல்வது அவனு டைய ஆயுளில் இதுவரையிலும் அத்தகைய தண்ணிரை அவன் உண்டதே இல்லை. உணவுகொள்ளவும் வேண்டா மல் இந்தத் தண்ணிரையே பருகிக்கொண்டிருக்கலாம் போல் இருக்கிறதே என்று அவன் எண்ணினன், மறுபடியும் கை நிறைய... எ டு த் து உண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/84&oldid=1283940" இலிருந்து மீள்விக்கப்பட்டது