பக்கம்:இரு விலங்கு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டையம் புண்டரிகம் 63 பல முறை உண்ட பிறகு வயிறு நிரம்பிவிட்டது. அந்தப்

பொய்கையின் கரையிலே உட்கார்ந்து கொண்டான். அவன் நல்ல தண்ணிருக்கு ஏங்கி எங்கெங்கோ அலே ந்

தானே, அந்தப் பழைய வரலாறுகள் எல்லாம் இப்போது நினே வுக்கு வந்தன.

பழைய அநுபவம்

மிகவும் ஆழமாகக் கிணற்றைத் தோண்டிப் பாதாளத்திலிருந்து இப்போதும் பலவிடங்களில் தண் னிரை எடுக்கிரு.ர்கள். அப்படி ஆழமான கிணறுகளே வெட்டினலும் சில சமயங்கள் மழை இன்மையினல் அந்தக் கிணறுகளில் தண்ணிர் இல்லாமல் போய்விடு கிறது. பதிற்றுப்பத்து என்ற நூலில் கொங்குநாட்டி லுள்ள சிலவகைக் கிணறுகளேப் பற்றிய செய்தி வரு கிறது. அங்கே மிகவும் ஆழமான கிணறுகள் இருக் கின்றன. கிணற்றில் கயிற்றைவிட்டுத் தண்ணிரை மொண்டு இழுக்க வேண்டும். இழுக்க இழுக்க மேலே கயிறு வந்துகொண்டிருக்குமேயன்றித் தண்ணிரைக் காண்பது எளிதன்று, ஆகையால் அதைக் கயிறு குறு

முகவை' என்று ஒரு புலவர் சொல்கிரு.ர்.

இப்படியுள்ள கிணறுகளில் தண்ணிரை எடுத்துப் பார்த்துக் கிடைக்காமல் துன்புற்றவன் அவன். இப் போது கண்ணுக்கு முன்னலே மிக விரிவாகப் பெரிய பொய்கை தண்ணிர் நிரம்பிக் காட்சி அளித்தது. இத் தகைய நீர் நிலையை அவன் கண்டதே இல்லை. யாரும் தடுத்து நிறுத்தவில்லே. சுதந்திரத்துடன் பொய்கையில் இறங்கிக் கைநிறைய மொண்டு, வாய் நிறையக் கொண்டு, வயிறு நிறைய உண்டான். இப்போது, இன்னும் கொஞ்சம் வயிறு குறைந்தால் தண்ணிரை, எடுத்துப் பருகலாமே என்று அமர்ந்திருக்கிருன். இனி மேல் அவனுக்குத் தாகத்தைப் பற்றிக் கவலேயில்க்ல;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/85&oldid=539463" இருந்து மீள்விக்கப்பட்டது