பக்கம்:இரு விலங்கு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 இரு விலங்கு

வெப்பத்தைப் பற்றிய துன்பம் இல்லே. அவனைப் போலவே பல பேர் அந்தப் பொய்கையை அண்டி வந்து, நீரை மொண்டு உண்டு இருக்கிருர்கள்.

அமுதப் பொய்கை

. இது வெறும் பொய்கையைப் பற்றிய கதை ஆளுல் அந்தப் பொய்கை அமுதமாக இருந்தால் எப்படி இருக்கும் நீர் வெறும் காகத்தை மாத்திரம் தீர்க்கிறது. அமுதமோ பிறவிப் பிணியையும், பெருந் துன்பமாகிய இறப்பையும் போக்குவது. அது அமுதத்தினலே நிறைந்த பொய்கை, சுவை பொருந்திய அமுதம் பெற்ற பொய்கை இதுபோலக் கிடைப்பது அரிதுதான் தேவர் கள் பாற்கடலேக் கடைந்து கிடைத்த அமுதங்கூடப் பொய்கையாக இருக்கவில்லை; கு ட த் தி ல் தா ன் கிடைத்தது.

அமுதப் பெருங்கடல் என்று சொல்வதற்குரியது அது. அதுதான் இறைவன் திருவடி. அதனே அடைந்து அமுதபானம் பண்ணவேண்டுமென்று தொண்டர்கள் மிகவும் முயற்சி செய்கிரு.ர்கள். அவர்களுடைய லட்சியம் இறைவன் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டு மென்பதே. அந்த அடியோடு அன்பர்களுக்கு உள்ள தொடர்பு பல வகையானது. -

திருவடிச் சிறப்பு

இறைவன் திருவடியை வெவ்வேறு வகையில் பல பெரியவர்கள் பாராட்டி யிருக்கிரு.ர்கள். அது தேன் சொரியும் மலர் என்றும், ஞானமே திருவுருவமானது என்றும், மோட்சமே உருவாக இருப்பது என்றும் சொல்வார்கள். ஞானம் என்பது அறிவு இறைவனைத் தெளிவிக்கும் அறிவு. இறைவன் திருவடியை நம்பினவர் களுக்கு முதலில் ஞானம் உண்டாகும். பின்பு அதன் பயனகப் பேரின்ப அதுபவம் உண்டாகும் அறிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/86&oldid=539464" இருந்து மீள்விக்கப்பட்டது