பக்கம்:இரு விலங்கு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


እ

yli

ஒளியில் விளைந்த உயர்ஞான யூதரத்

துச்சியின்மேல் - அளியில் விளைந்ததோ ரானந்தத் தேனே '

என்பது அலங்காரம். பூரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் முதலியவர்கள் இந்தச் சோதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளும் புறம்பும் சோதி யுருவைத் தரிசித்து இன்புற்றவர்கள். பூர் வடகுமரைச் சுவாமிகளும் சோதி வெள்ளத்தில் மிதப் பவர், அருணகிரியார் வாக்கில்,

ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே

முருகன் உருவம் கண்டு' என்று வருவதைக் கேட்டால் அவர் ஆனந்தக் கூத்தாடு வார். .

அநுபூதிமான்களின் அநுபவம் ஒத்திருக்கும் என்பதை அவர்களுடைய வாக்கிலிருந்து காணலாம். து விண் டு சுடரனைய சோதி கண்டாய் ' என்று அப்பர் பாடினல், சோதியே சுடரே சூழொளி விளக்கே’’ என்று மாணிக்க வாசகர் பா டு வார். சோதியுட் சோதி' என்பார் இராமலிங்க சுவாமிகள். - .

பாட்டைப் படிப்பதும் கேட்பதுங்கூட ஒருவகையான சாதனம் என்பதைப் பலர் கூறி யிருக்கிருர்கள். வடகுமரை அண்ணலிடம் அதைக் கண்கூடாகக் காணலாம், அருணகிரி நாதர் பாடலில் அநுபவத் தேக்கமுள்ள இடம் வந்துவிட் டால் அவர் கண்ணில் ஒளியும் புனலும் வெளிப்படும்; உடம்பு புளகம் போர்க்கும். தம்மை மறந்து சில நேரம் இருந்து விடுவார். அத் த ைக ய இன்ப மயக்கத்தில் ஆழ்த்தும் மருந்தாக அருணகிரியார் வாக்கு விளங்குகிறது.

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகளில் வரும் பல பகுதிகளைக் கண்டு மிகவும் பாராட்டி இன்புறுவார் சுவாமி கள் அநுபூதிமான்கள் பாராட்டினல் அதற்குத் தனிச்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/9&oldid=539387" இருந்து மீள்விக்கப்பட்டது