பக்கம்:இரு விலங்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இரு விலங்கு

. (ל

விழாது, காற்று அடித்தாலும் தெரியாது அவனுக்குப் பத்தகத்தின்மேலே கண். மற்றவற்றை எல்லாம் மறந்து விடுகிருன். ஏதேனும் ஒரு பொறி தீவிரமாக இருக்கிற போது மற்றவை எல்லாம் தம் வலுவை இழந்து நிற் கிறது இயல்பு: அந்தப் பொறியினிடத்தில் எத்தக்ன ஈடு பாடு மிகுதியாக இருக்கிறதோ அத்தனேக்கு அத்தக்ன மற்றப் பொறிகள் தம் ஆற்றல் இழந்து நிற்கும்.

முதலில் சுந்தரமூர்த்தி நாயனருடைய கண் தில்&லச் சிற்றம்பலத்தில் இறைவனுடைய திருவுருவத்தைப் பார்க் கத் தொடங்கியது. அந்தக் காட்சி வர வர உரம் பெற் றது; மற்றப் பொறிகள் எல்லாம் தம்முடைய ஆற்றல் இழந்தன. ஒலி எதுவும் அவர் காதில் விழவில்லே, மெல்ல. வீசிய காற்றை அவர் உணரவில்லை. அவர் வாயில்ே தேன் சொட்டினலும் அப்போது அவருக்குச் சுவை தெரி, யாது. மணத்தை அவருடைய நாசி தெரிந்துகொள்ள வில்லை; ஐந்து சன்னல்கள் உள்ள ஓர் அறையில் மற்ற நான்கு சன்னல்களே அடைத்துவிட்டால் எப்படி ஒரு சன்னல் வழியாக அதிகக் காற்று வருமோ அப்படிக் கண் ஒன்றுமாத்திரம் வேலே செய்ய மற்றப் பொறிகளெல்லாம் அடங்கி நின்றன. ஐந்து பொறி அறிவையும் கண்களே கொண்டன. பின்பு அடுத்தபடியாக அவருடைய அந்தக் கரணம் வேல் செய்யத் தொடங்கியது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று அந்தக்கரணம் நான்கு வகைப்படும். இவற்றில் ஒன்றைப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையது சித்தம். அதனைச் சிந்தை என்றும் சொல்வார்கள். அந்தக்கரணத்திலுள்ள ஏனைய மூன்று பகுதிகளும் அடங்கி நிற்க, உறுதியாக ஒன்றைப் பற்றிக் கொள்ளும் சித்தம் மாத்திரம் தன் வேலையைச் செய்தது. நடராசப் பெருமானேக் கண்கள் காண, அதேைல எழுந்த உணர்ச்சி உரம்பெற்று உறுதியாகச் சிந்தை மட்டும் தொழிற்பட்டது. பின்பு மூன்று குணங்கள் அமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/92&oldid=1283944" இலிருந்து மீள்விக்கப்பட்டது