பக்கம்:இரு விலங்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

71

தண்டிையம் புண்டரீகம் of

திருந்த மனத்தில் எனய குணங்கள் அடங்கி நிற்க, சத்துவ குணம் மாத்திரம் மலர்ந்து நின்றது. கண் வாயிலாகச் சென்ற காட்சி அந்தக்கரணத்தினூடே சென்று உறுதியை உண்டாக்கி, மற்றக் குணங்கள் தாழ்ந்து சத்துவம் கலயெடுக்கச் செய்யவே, அப் போது ஆனந்தக் கிளர்ச்சி உண்டாயிற்று. r

முன்பு சொன்ன பாட்டிலே இந்த அதுபவத்தைக் தான் சேக்கிழார் சொன்னர், மற்றவர்கள் எல்லாம் காணுகின்ற காட்சி போன்றது அன்று இது காட்சி வாயிலாகவும், கருத்து இடைகழியாகவும், அநுபவம் உள் அறையாகவும் இருக்கிற நிகழ்ச்சி இது கண்ணில்ை கண்டு, பின்பு உள்ளே சென்று கருத்தினால் மொண்டு, பின்பு அதற்கும் உள்ளே சென்று உயிரினல் உண்ண வேண்டும். கண் என்பது வாயில். உள்ளம் என்பது இடைகழி, உயிர் என்பது கடைசி அறை , கண்ணிலே காட்சியாகத் தோன்றியது ஓர் அதுபவம். கருத்திலே இது உணர்ச்சியாக மாறி உயிரிலே ஆனந்தமாகக் கனிந்து விடும். இதற்கு வாயில் கண்: வழியாக இருப் பது கருத்து முடிவாக இருப்பது உயிர். அருணகிரி நாதப் பெருமான் இந்த மூன்றையும் சொல்கிருர், காணுதல் ஒன்று. அண்டி மொள்ளுதல் ஒன்று. உண்டு இருத்தல் ஒன்று. காணுதல் எல்லோராலும் செய்வதற் குரியது. அண்டிக் காணுதல் அன்பர்களுக்கே உரியது. அண்டின பிறகு மொள்ளுதல் தீவிரமாக உள்ள அன்பர் களுக்குரிய செயல். பின்பு உண்ணுதல் அதுபவிகளுக் குரிய செயல். அப்படி உண்னும் அநுபவம் மாருமல் இருக்க வேண்டும். o - .

கண்டு அண்டி மொண்டு உண்ணுதல்

முருகப்பெருமானுடைய திருவடியைத் தொண்டர் கள் காண்கிரு.ர்கள். பின்பு அதை அண்டி மொண்டு உண்டு இருக்கிருர்களாம் காணும்போது புண்டரிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/93&oldid=1402485" இலிருந்து மீள்விக்கப்பட்டது