பக்கம்:இரு விலங்கு.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 இரு விலங்கு

மாகக் காட்சி தருகிறது. அண்டும்பொழுது கண்டையம் புண்டரிகமாகக் காட்சி தந்து, மொள்ளும்போது ஞான மாகக் காட்சி தந்து, உண்டு இருக்கும்போது சுத்த ஞான மாகக் காட்சி தருகிறது. ஞானம் என்பது சத்துவமான அறிவு. சுத்த ஞானம் என்பது ஞானமே அநுபவமான நிலை. அதை ஞானனந்தம் என்று பேசுவார்கள் ஞாதுரு ஞான ஞேயம் என்ற திரிபுடி நிலையில் உள்ள ஞானம் வேறு; லட்சியமான ஞானனந்தம் வேறு. சத், சித், ஆனந்தம் என்று சொல்கிற முறையில் சித் என்பது ஒன்று; அது ஞானம், அதுவும் அநுபவந்தான். அந்த அநுபவப்பொருளைப் பிரக்ஞானம் பிரம்மம் என்று மகா வாக்கியம் கூறுகிறது.

புண்டரிகம்

முருகப்பெருமானுடைய திருவடி கண்ணிலே காணும் போது தாமரையைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. தாமரை மலர்களிலெல்லாம் மிகச் சிறந் தது. நல்ல மலர்களைக் கண்ணுலே கண்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள். அந்த மலரை அண்டிக் கண்டால், கண்ணில் ஒற்றிக் கொண்டால், கண்ணி லுள்ள் வெதுப்புப் போகும். தொண்டர்கள் முருகப் பெருமானுடைய திருவடியைப் புண்டரிகமாகக் கண்டு போற்றுவார்கள். அது அன்பு நிரம்பிய உள்ளமாகிய பொய்கையில் பூப்பது. ஞான மணம் கமழ்வது. வேதம் என்னும் வண்டு ஒலம் இடுகின்ற மலர் அது. இவ்வாறு. பக்தர்கள் அந்தத் தாமரையைப் பாராட்டுகிரு.ர்கள் -

தண்டையம் புண்டரிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/94&oldid=539472" இருந்து மீள்விக்கப்பட்டது