பக்கம்:இரு விலங்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இரு விலங்கு


டோம். அதல்ைதான் சிலம்பொலி கேட்க நேரம் ஆயிற்று' என்று வருந்தினர். அந்த வருத்தத்தைப் போக்க ஆண்டவன், தில்லேயில் தரிசனம் பண்ணு வதற்குச் சுந்தரமூர்த்தி வந்திருந்தான். அதல்ை இந்த ஒலி கேட்கச் செய்ய நேரம் ஆயிற்று' என்று அருளினைம். சிறந்த நாயனராகிய சேரமான் பெருமாள் நடராசப் பெருமானுடைய திருவடி தரிசனத்தைக் கண்டு, சிலம்பொலியையும் கேட்டார் என்று இந்த வரலாறு தெரிவிக்கிறது. நெருங்கின அன்பர்களுக்குப் பாதச் சிலம்பொலி கேட்கும் என்பதை இந்த வரலாற் றினல் உணர்ந்து கொள்ளலாம், -

ஞானமெனும் தண்டையம் புண்டரிகம்

எனவே, முருகப் பெருமானுடைய திருவடியைக் கண்டு அண்டுகிற தொண்டர்கள் தண்டையின் ஒலியை யும் கேட்பார்கள். அந்தத் திருவடியை முதலில் கண்ணு ஞலே கண்டு, பின்பு அண்டி நின்று, கருத்தினலே மொண்டு பார்க்கும் அன்பர்களுக்கு அது வெறும் தண்டையம் புண்டரிகமாகத் தோன்ருமல் ஞானமாகத் தோன்றும், ஞானம் பெற்றவர்கள் உலகத்திலுள்ள பொருள்களே முன் பார்த்த பார்வையும், இப்போது பார்க்கின்ற பார்வையும் வேருக இருக்கும். அகத்தில் கண் கொண்டு பார்க்கும் போது பொருள்களின் இயற்கை வடிவம் தோன்றும். இறைவனுடைய திருவடி களாகிய தண்டையம் புண்டரிகத்தைக் கண்டு, அண்டி, மொண்டு நின்ருல் அந்தப் புண்டரிகமே ஞானமயமாக நின்று ஒளிவிடும். அப்போது எல்லாப் பொருள்களையும் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ளலாம். - -

- ஞான விளக்கு மீனுட்டு அம்மை பிள்ளைத் தழிழில் குமரகுருபரர் இந்தக்கருத்தை வேறுஒருவகையில் சொல்வார். எம்பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/96&oldid=1283946" இலிருந்து மீள்விக்கப்பட்டது