பக்கம்:இரு விலங்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இரு விலங்கு


இறைவன் திருவுருவத்தைத் தரிசிக்க வேண்டும். கோயில் மாத்திரம் பார்த்து இறைவன் விக்கிரத்தைக் காணுதவன் எப்படிப் பயனே விட்டவன் ஆகிருனே அப்படியே கோயி அலுக்குள் சென்று இறைவன் திருவுருவத்தைக் கண்டு அவன் அடியைப் பாராமல் இருக்கிறவனும் ஆ வ | ன். திருவடியைக் கண்டவன்கூட முழுப் பயனைப் பெற்றவன் என்று சொல்ல முடியாது. அந்தத் திருவடியைக் காண் பது அன்பர்களுடைய நிலேயின் முதல் படி மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க வந்தவர்கள், இறைவன். திருவடியைக் காண முந்துகிறபோதுதான் அவர்கள் அநுபவமாகிய எல்லையில் கால் எடுத்து வைக்க முயல் கிரு.ர்கள். திருவடியைக் காணுவதுகூட முற்றிய நில் யாகாது. கண்டு அண்ட வேண்டும். பின்பு புறக் கண்ணி ஞலே கண்டதை அகக் கண்ணிஞலே காணவேண்டும், அதுதான் மொள்ளும் நிக்ல. அப்புறம் அந்த நிக்லயி னின்றும் பின்னும் உள்ளேபோய் உயிரோடு இணேந்து அநுபவம் பெறவேண்டும்.

கோயிலுக்குச் சென்று இ ைற வ சீன க் கண்டு அதல்ை தம்மை மறக்கின்ற இன்பம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடைந்தார் என்றும், அவர் இந்த மூன்று நிலயையும் படிப்படியாகக் கடந்து இன்புற்ருர் என்றும் தெரிந்து கொண்டோம். முருகப்பெருமான் தன் திருவடியை, நமக்குத் தண்டையம் புண்டரிகமாகக் காட்டினல் போதாது; சுத்த ஞானமாகத் தரவேண்டும். அப்படித் தந்தால்தான் முடிந்த முடிபாகிய பேரின்ப அநுபவம் நமக்கு உண்டாகும் தொண்டர்கள் காணும் புண்டரிகம், கண்டு அண்டும் தண்டையம் புண்டரிகம், கண்டு அண்டி மொள்ளும் ஞானமெனும் தண்டையம் புண்டரிகம், கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரீகம் என்று படிப்படி யாகச் செயலும் அநுபவமும் ஏறிவரும் வகையில் பார்க்க வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/98&oldid=1283947" இலிருந்து மீள்விக்கப்பட்டது