பக்கம்:இரு விலங்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

77

தண்டையம் புண்டரிகம் לל

நிறையப் பணம் வைத்த பெட்டி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பெட்டியை விட்டுக்குக் கொண்டு வருகிருேம். மிக அதிக விலையுள்ள விற்பிடி மாணிக்கம் ஒன்று அந்தப் பெட்டியில் இருக்கிறது என்று அதைக் கொடுத்தவர் சொல்கிருர், பெட்டியைக் கொண்டு வந்து சாவி போட்டுத் திறக்கிருேம், அந்தப் பெட்டிக்குள் பல அறைகள் இருக்கின்றன. நடு அறை ஒன்று இருக்கிறது, அதையும் திறக்கிருேம். அதற்குள்ளேதான் ரத்தினம் ஒரு கிழியில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் துணியை எடுத்து, முடிச்சை அவிழ்த்துப் பின்பு ரத்தினத்தை எடுத்துக் கொள்கிருேம். பெட்டி ரத்தினம் உடையதாக இருந்தாலும் அதனேத் திறந்து, அறையையும் திறந்து, முடிச்சையும் அவிழ்த்த பிறகுதான் ரத்தினத்தைக் கையில் எடுத்துக் காண முடியும்.

அவ்வாறே, படிப்படியாக நம் சாதனம் உயர வேண்டும். கோயிலில் ஆண்டவன், திருவடியுடன் கூடிய உருவத்தோடு நமக்கு இன்பம் தருகின்ற நிலையில் விளங்கி ஞலும் அவனைத் தரிசிக்கும் முறையில் தரிசித்து இன்பம் அநுபவித்தவர்கள் சிலரே. கோயிலே மாத்திரம் தரிசித்து வருபவர்கள் பலர் கோயிலேத் தரிசித்து இறைவன் திரு. வுருவத்தையும் கண்டு வருகிறவர்கள் சிலர். திருவுருவத் தைப் பார்ப்பதோடு திருவடியைக் கண்டு வருகிறவர்கள், ஒன்றிரண்டு பேர்கள்தாம் கண்டு, மொண்டு அகக்கண் ணிலே தேக்கிப் பேரின்ப அநுபவத்தைப் பெறுகிறவர் எங்கோ லட்சத்தில், கோடியில் ஒருவர். கோயிலுக்குப் போவது, திருவுருவத்தைப் பார்ப்பது, திருவடியைக் கண்டு தரிசிப்பது, திருவடியைப் புறக்கண்ணிேைல. காண்பதோடு அகக் கண்ணிலே காண்பது என்பவற்றில் ஒவ்வொன்றும் அடுத்ததற்குப் படியாக இருக்குமானுல் அந்த முயற்சிக்குப் புலன் உண்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/99&oldid=1402488" இலிருந்து மீள்விக்கப்பட்டது