பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எசமானனும் வேலைக்காரனும்
19
 

வில்லை. குள்ளன் மகிழ்ச்சியோடு ஒரு காலைத் தொங்க விட்டுக்கொண்டான். அவனுடைய கண்களில் புதிய ஒளி வீசிற்று. அவன் மனமகளை ஒரு முறை ஆவலோடு பார்த்துக்கொண்டு, தானியேல் பக்கம் திரும்பி, "பாதி அளவுக்கு அவள் என்னுடைய வளாகிவிட்டாள். இன்னும் இரண்டு முறை அவள் தும்மிவிட்டால், பிறகு அவள் முழுதும் என் மனைவியாகிவிடுவாள் ! பாதிரியார், அவருடைய வேத நூல், மணமகன் முதலிய யாரும், எதுவும் குறுக்கே நின்று தடுக்க முடியாது!" என்று சொன்னான்.

உடனே அழகி இரைலீ மறுபடி தும்மினாள்; அவள் தும்மியது பலருக்குத் தெரிந்திருக்க முடியாது. அவ்வளவு மெதுவாகவே தும்மினாள். ஆனால், குள்ளன் அதைக் கவனித்துவிட்டான். அப்பொழுது அங்கிருந்த எவரும், 'கடவுள் நம்மைக் காப்பாராக !என்று சொல்லவேயில்லை. அந்தச் சிந்தனையே ஒருவருக்கும் எழவில்லை.

தானியேல் நெடுநேரமாக மணமகள் இரைலீயைப் பற்றியே கவலை கொண்டிருந்தான். பத்தொன்பது வயதுள்ள அந்த மங்கையின் அழகும் கருநீலக் கண்களும் பளபளப்பான உடலும் சிவந்த கன்னங்களும் ஊக்கமும் உற்சாகமும் உயிர்த்துடிப்பும் எங்கே - ஆயிரம் வயதுக்கு ஒரு நாள் குறையுள்ள விகாரமான குள்ளன் எங்கே? கூனிக் குறுகிக் கிடக்கும் இவனல்லவா அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க எண்ணியிருக்கிறான்!' என்று அவன் எண்ணினான்.

அந்த நேரத்தில் மணமகள் மூன்றாவது முறையாகத் தும்மிவிட்டாள். உடனே தானியேல், தன் முழு வல்லமை யையும் சேர்த்துக்கொண்டு, மிகவும் உரத்த குரலில், "கடவுள் நம்மைக் காப்பாராக!" என்று கூவிவிட்டான். இது அவனுடைய சிந்தனையின் எதிரொலியாக ஏற்பட்டதா அல்லது அவனுடைய சுபாவத்தினால் ஏற்பட்டதா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால், அந்தச் சொற்களைக் கேட்டவுடனே குள்ளனின் முகம் சிவந்துவிட்டது. கோபம் ஒரு புறம், ஏமாற்றம் ஒரு புறம் அவனை உலுக்கிவிட்டன. அவன் தன் விட்டத்திலே எழுந்து நின்றுகொண்டு, கீச்சுக் குரலில், "தானியேல், உன்னை என் வேலையிலிருந்து