பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீமாட்டி காதலின்
23
 

"பலர் ஏழைகளைப் போல வேடம் தரித்து வந்து ஏமாற்றிவிடுவார்கள். அதனால்தான் நாங்கள் உண்மை யான ஏழைகளுக்கு உதவிசெய்ய முடியாமலிருக்கிறது. உதவி தேவையுள்ளவர்கள் வந்து எங்கள் கதவைத் தட்டினால், நாங்கள் அதைத் திறக்கத் தயங்குவதில்லை !” என்று அவர்களுள் ஒருவன் பதிலளித்தான்.

இது நிகழ்ந்த மறுநாள், இரண்டு வணிகர்களும் மக்களுக்குப் பொன்னாக வாரி இறைக்கிறார்கள் என்ற வதந்தி வெளியே எங்கும் பரவிவிட்டது. அவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பெருங்கூட்டமாக ஜனங்கள் சூழ்ந்துகொண்டனர். ஆனால், உள்ளே சென்று வெளி வந்தவர்களுள் சிலரே கெளரவத்துடன் தலைநிமிர்ந்து சென்றார்கள்; பலர் அவமானத்தால் முகம் சிறுத்து வாடியிருந்தார்கள்.

இரண்டு வியாபாரிகளும் என்ன வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்? சயித்தானுக்காக* ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார்கள் ! இதுதான் அவர்களுடைய தொழில் வயது முதிர்ந்தவர்களின் ஆன்மா ஒன்றுக்கு இருபது பொற்காசுகள் விலை; ஒரு பைசா கூடுதலாகக் கொடுக்கமாட்டார்கள். விவாகமான ஸ்திரீகளின் ஆன்மாவுக்கு மதிப்பு ஐம்பது பொற்காசுகள். அவர்களிலே விகாரமான தோற்றமுடையவர்களின் ஆன்மாவுக்கு நூறு பொற்காசுகள். இளவயது மங்கையரின் ஆன்மாக்களுக்கு மதிப்பு மிக அதிகம். பரிசுத்தமான புது மலர்களுக்குக் கிராக்கி அதிகமல்லவா !

அந்தக் காலத்தில், அந்த நகரிலே, பேரழகும் பெருந்தன்மையும் வாய்ந்த காதலீன் ஓ'ஹீஎன்ற சீமாட்டி ஒருத்தி இருந்தாள். மக்களெல்லோரும் அவளிடம் அன்பு கொண்டு அவளைப் போற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு அவள் உற்ற துணையாக விளங்கினாள். வணிகர்கள், மக்களின் துயரங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்டவனை அவர்கள் மறக்கும்படி செய்து வந்ததை— —————————————————————————————————————— * சயித்தான் - ஆண்டவனின் பகைவன்; மக்களைப் பாவம் செய்யத் துண்டுபவன்.