பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டு மல்லர்கள்
37
 

 'நானும் அப்படித்தான் எண்ணினேன் ! நீங்கள் அவரைப் பார்க்காமலிருப்பதே நலம் இரவும் பகலும்ஆண்டவனைப்பிரார்த்தனைசெய்துகொண்டேயிருங்கள் அவரைச்சந்திக்காமலிருக்கவேண்டுமென்று.என்றாவது சந்திக்க நேர்ந்தால், அந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக இராது. அது கிடக்கட்டும் இப்பொழுது காற்று வீட்டினுள் பலமாக வீசுகிறதே! அவர் இருந்தால், இந்த வீட்டைக் காற்றில்லாத பக்கம் திருப்பிவைத்துவிடுவார். இப்பொழுதுவிருந்தாளியைவேலைவாங்கவேண்டியிருக்கிறது. நீங்கள் வீட்டை சற்றே திருப்பி வையுங்களேன் .

வீடு மரக்கட்டைகளால் அமைக்கப்பெற்றதுதான். ஆயினும்,வீட்டையேதிருப்பவேண்டும்என்றதும்குகுல்லினுக்கே அச்சம்தோன்றியது.அவன்எழுந்திருந்து, தன் வலக்கை நடுவிரலை மூன்று முறை சொடக்கிட்டுச் சரிப்படுத்திக்கொண்டு, வெளியே சென்று, வீட்டின் அடிப்பகுதியில் கைகளை வைத்து அதைத் திருப்பி வைத்தான். தொட்டிலிலே கிடந்த மக்கெளல் வீடு ஆடியதைக் கண்டு திகிலடைந்தான். அவன் உடல் முழுதும் வியர்வையால் நனைந்துவிட்டது. ஆனால், அவனுடைய மனைவி, சிறிதும் துளங்காமல், பெண்மைக்குரிய தன் கூரிய புத்தியை நம்பிக்கொண்டிருந்தாள்.

குகுல்லின் உள்ளே வந்ததும் அவள், நீங்கள் நல்ல உபகாரியாயிருக்கிறீர்கள். இன்னும் ஒரு சிறு வேலை இருக்கிறது. இங்கே தண்ணிர் இல்லை. அவர் இங்கிருக்கும் பொழுதே அருகிலுள்ள பாறையைப் பெயர்த்து நீர் எடுத்துத் தருவதாகச் சொன்னார். அதற்குள் தாம்போதியை நோக்கிப் போய்விட்டாரே! தாங்கள் கொஞ்சம் சிரமத்தைப் பாராமல் வந்து பாறையைப் பெயர்க்க முடியுமோ” என்று விநயமாகக் கேட்டாள்.

அவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்று, மாபெரும் பாறை ஒன்றை அவள் அவனிடம் காட்டினாள். அவன் சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டுத் தன் நடுவிரலைச் சொடக்கிடத் தொடங்கினான். ஒன்பது முறை சொடக்குப் போட்ட பின்பு, மெதுவாகச் சென்று பாறையில் கைகளை வைத்து அழுத்தினான் சிறிது நேரத்திற்குள் பாறையை அடியோடு பெயர்த்தெடுத்து