பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இறுமாப்புள்ள இளவரசி


 வெளியே வைத்தான். அதன் உயரம் 400 அடி, நீளமும் அகலமும் 1320 அடி இருக்கும்! இதைக் கண்டு ஊனாக்கே திடுக்கிட்டாள். இருந்தாலும் பெண்களின் உறுதியாலும் சாதுரியத்தாலும் எதைத்தான் சாதிக்க முடியாது?

"சரி, இனித் தாங்கள் உள்ளே வந்து சற்றுப் பசியாறிக் கொள்ளுங்கள் ஏதோ எங்களுக்குரிய அற்பமான உணவைத் தங்களுக்கும் அளிக்கிறேன். என் கணவர் இருந்திருந்தால், நீங்கள் இருவரும் எதிரிகளாயிருந்த போதிலும், உங்களை உபசரிக்காமல் அனுப்பச் சம்மதிப்பாரா? அவர் இல்லாவிட்டால் என்ன? அவர் கடமையை நான் செய்கிறேன் !" என்று சொல்லி, அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவள் முன்பே தயாரித்து வைத்திருந்த இருபத்தொரு பெரிய ரொட்டிகளுள் ஆறும், இரண்டு மூன்று அடுக்குகளில் வெண்ணெயும், ஏராளமான இறைச்சியும், கீரையும் கொண்டுவந்து அவன் முன்பு வைத்து, அமுது செய்யும்படி வேண்டினாள். குகுல்லின் சாப்பாட்டிலும் பெரிய வீரனானதால், உடனே உண்னத் தொடங்கினான். முதலாவது ஒரு முழு ரொட்டியைத் துக்கி அப்படியே வாய்க்குள் போட்டு மென்றான். அவன் ஒரு கடி கடித்தானோ இல்லையோ, ஏதோ விலங்கு ஊளையிடுவது போல் கத்தத் தொடங்கினான். "பாழாய்ப்போக 1 ஐயோ, போய்விட்டதே இதென்ன இது? என் பற்களுள் இரண்டு தெறித்து விழுந்துவிட்டனவே! நீ கொடுத்த இந்த ரொட்டி என்ன ரொட்டி?” என்று அவன் உரக்கக் கூவினான்.

“என்ன விஷயம்” என்று ஊனாக் அமைதியாகக் கேட்டாள்.

“விஷயமா? என் வாயிலுள்ள பற்களுள் முதல் தரமான இரண்டு பற்கள் உடைந்துவிட்டன " என்று அவன் மீண்டும் ஆவேசத்துடன் கத்தினான்.

"என்ன இது இதுதானே மக்கெளல் இங்கிருக்கும் பொழுது நாள்தோறும் உண்ணும் ரொட்டி! ஆனால், நான் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அவரைத் தவிர வேறு யாரும் இதை மென்று தின்ன முடியாது. அவரைப் போலவே, அதோ தொட்டிலில் படுத்திருக்கிறானே அவர் பிள்ளை அவனும் தின்பான் ! நீங்களும் பெரிய