பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
இறுமாப்புள்ள இளவரசி
 

 அதை மென்று தின்று தீர்த்துவிட்டதே ' என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

"இந்த அற்புதக் குழந்தையின் முகத்தை நான் பார்க்க விரும்புகிறேன். இத்தகைய உணவை உண்ணும் பையன் சாதாரணமானவன் அல்லன் " என்றான், குகுல்லின்.

"நீங்கள் குழந்தையைப் பார்க்க நான் கொடுத்து வைத்தவள்தான் வந்து பாருங்களேன் - பாப்பா, இங்கே ஒரு சின்ன மனிதர் வந்திருக்கிறார். அவரிடம் நீ யார் மகன் என்பதைக் கொஞ்சம் காட்டு, பாப்பா !” என்று ஊனாக் கூறினாள்.

மக்கெளல் குழந்தையைப் போல் அலங்களிக்கப் பெற்றிருந்தானல்லவா? குழந்தையைப் போலவே அவன் உடலை வளைத்துக்கொண்டு எழுந்திருந்து, அமர்ந்து, "உனக்குப் பலம் இருக்கிறதா?” என்று குகுல்லினைப் பார்த்துக் கேட்டான்.

"இதென்னடா அதிசயம்! சின்னக் குழந்தையா இப்படி உறுமுவது போல் பேசுகிறது!" என்று குகுல்லின் கூறினான்.

மக்கெளல் மறுபடி, "உனக்குப் பலம் இருக்கிறதா? இருந்தால், இந்தச் சிறு வெள்ளைக் கல்லைப் பிழிந்து தண்ணிர் எடுக்கவேண்டும் " என்று சொல்லி, ஒரு கல்லை அவனிடம் கொடுத்தான்.

குகுல்லின் கல்லைக் கைகளுக்கிடையில் வைத்துக் கொண்டு பன்முறை அமுக்கியும் நசுக்கியும் பார்த்தான். அவன் படுகிற பாடுகளைக் கண்டு தொட்டிற்பயில்வான் ஏளனமாக நகையாடிக்கொண்டிருந்தான். குகுல்லின் கல்லைப் பிசைய முயன்று முயன்று கைகளைப் புண்ணாக்கிக்கொண்டதைத் தவிர வேறு பயனில்லை. அவன் முகம் கறுத்துவிட்டது.

"இவ்வளவுதானா உனது வல்லமை! நீயா பெரிய அசுரன்? அந்தக் கல்லை என்னிடம் கொடு, மக்கெளவின் மகன் என்ன செய்ய முடியுமென்று காட்டுகிறேன் "

மக்கெளல் கல்லை வாங்கிக்கொண்டான் கண்மூடித் திறப்பதற்குள் அதை மாற்றி, அதற்குப் பதிலாகத் தான் தயாராக வைத்திருந்த தயிர்க்கட்டியைக் கைக்குள் வைத்துக் கொண்டு பிழிந்தான். உடனே கல்லிலிருந்து நீர் வழிந்து