பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு மல்லர்கள்

41



விட்டது! இந்தக் கல்லை நசுக்க முடியாத உன்னை, அப்பா வந்தால், ஒரு நிமிடத்தில் பச்சடியாக்கிவிடுவார் " என்று சொல்லிவிட்டு, அவன் மீண்டும் தொட்டிலில் படுத்துக் கொண்டான்.

குகுல்லினும் அப்படியே எண்ணினான். மக்கெளலை எண்ணியதும் அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. விரைவிலே ஊனாக்கிடம் விடை பெற்றுக்கொண்டு, அந்த இடத்தை விட்டு அகல்வதே நலமென்று அவன் தீர்மானித்தான். "நான் மக்கெளலுக்கு ஈடானவனல்லன் ! இனி அவனுடன் பொருதும் ஆசையும் எனக்கில்லை. இனி என் ஆயுட்காலத்தில் இந்தப் பகுதிக்கே வரமாட்டேன் என்பதை உன் கணவனிடம் சொல்லிவிடு ' என்று அவன் ஊனாக்கிடம் கூறினான்.

தங்கள் தந்திரங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த அசுரன் வெளியேறப்போவதை எண்ணி மகிழ்ந்து கொண்டே மக்கெளல் தொட்டிலில் மெளனமாகப் படுத்திருந்தான்.

“ஏதோ நீங்கள் வந்த சமயம் அவர் வீட்டிலில்லாமற் போனதும் நல்லதுதான் " என்றாள், ஊனாக்

"ஆம், நல்லதுதான் ! ஆனால், நான் புறப்பட்டுப் போகு முன்னால், இந்தத் தோசைக்கல்-ரொட்டியைத் தின்னக்கூடிய உன் குழந்தையின் பற்களை ஒருமுறை பார்க்கத் தோன்றுகின்றது " என்று அவன் கூறினான்.

"அதற்கென்ன, பாருங்கள்! அவன் பற்கள் வாய்க்குள் தள்ளி இருப்பதால் விரலை ஆழமாக வைத்துப் பார்த்தால் தான் தெரியும் " என்றாள், ஊனாக்

குகுல்லின் குழந்தையின் வாய்க்குள் கையை வைத்துப் பார்த்தான். குழந்தையின் பற்கள் அப்படி வரிசையாகவும் உறுதியாகவும் இருக்குமா என்று வியந்துகொண்டே அவன் கையை வெளியே எடுத்தான். இடையில் பற்களைவிட வியப்பான ஒரு வேலை நடந்துவிட்டது. அவனுடைய நடு விரலைக் காணவில்லை அந்த விரல்தான் அவனுக்கு உயிர்நாடி போன்றது. அந்த விரலைத்தான் குழந்தை கடித்துத் துண்டித்துவிட்டது.

உடனே குகுல்லின் வேதனையால் குமுறிக்கொண்டே தரையில் சாய்ந்தான்.