பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
இறுமாப்புள்ள இளவரசி
 

 கொடிய பகைவன் தொலைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுடன் மக்கெளல் தொட்டிலை விட்டுக் கீழே குதித்தான். சில நிமிடங்களுக்குப்பின் குகுல்லின் பிணமாகி

இவ்வாறு, உடல் வலிமையால் வெல்ல முடியாத பகைவனை மக்கெளல் தன் மனைவியின் அறிவைக் கொண்டு வென்றுவிட்டான். பொதுவாகப் பெண்கள் பல சமயங்களில் சங்கடமான நிலையில் ஆடவர்களைக் கொண்டுபோய் மாட்டிவைத்த போதிலும், சில சமயங்களில் அவர்களே அத்தகைய நிலையிலிருந்து விடுதலை பெறவும் உதவுகிறார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது.