பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
இறுமாப்புள்ள இளவரசி
 அவர் கூறிவிட்டுத் தமது பெயரைச் சொல்லி, "அவரே அந்த ஆசிரியர் " என்றும் தெரிவித்துக்கொண்டார்.

"அந்த ஆசிரியரிடம் போகக்கூடாது. அவர் கடவுளை மறுப்பவர் என்றும், சுவர்க்கம், நரகம் முதலியவற்றில் நம்பிக்கையற்றவர் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குகூட ஒரு ஆன்மா உண்டு அவரை நான் கண்டால் அவரைச் சிக்கிரத்தில் நானே சரிப்படுத்தி விடுவேன்!"

பாதிரியார் ஆத்திரத்தோடு அவன் முகம் நோக்கி, "எப்படி?” என்று கேட்டார்.

"எப்படியா? அவருக்கு உயிர் இருக்கிறது என்று அவர் நம்பினால், அந்த உயிரைக் காட்டும்படி கேட்பேன் "

"குழந்தாய், உயிரை எப்படிக் காட்ட முடியும்? உயிரைக் கண்ணால் பார்க்க முடியாது; ஆனால், அது இருப்பது உண்மை "

"அப்படியானால், நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் நமக்கு உயிர் இருக்கிறது என்றால், நம் கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும் நமக்கு ஆன்மாவும் இருக்கக் கூடுமல்லவா?”


இந்த வார்த்தைகளை அவன் கூறியவுடன், பாதிரியார் அவன் முன்பு முழந்தாளிட்டுக்கொண்டு, ஆனந்தக்கண்ணிர் பெருக்கினார் தமது ஆன்மா கடைத்தேறிவிடும் என்று அவர் மகிழ்ந்தார்; ஏனென்றால், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவனை அவர் கண்டுவிட்டார் பிறகு, அவர் அக்குழந்தை யிடம் தம் வரலாறு முழுவதையும் சொன்னார். தமது செருக்கு தீவினை, தேவசிந்தனை முதலியவைகளையும், தேவதூதர் வந்ததையும், தமக்காக இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் பிரார்த்தனை செய்து ஆதரவு கொடுத்தால்தான் தாம் முக்தியடைய முடியும் என்று தேவதூதர் தெரிவித்ததையும் விளக்கமாகக் கூறினார்


மேலும், அவர் கேட்டுக்கொண்டதாவது : "நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும். இதோ இருக்கும் எனது பேனாக்கத்தியைக்கொண்டு என் நெஞ்சிலே குத்த வேண்டும். நான் இறந்து விழும்பொழுது என் உடலிலிருந்து சோதிமயமான என் ஆன்மா சிறகடித்துக்கொண்டு வெளியேறி உயரே பறந்து செல்வதை நீ பார்த்ததும், நேராக என் பள்ளிக்குச் சென்று, என் மாணவர்களை அழைத்துவந்து அக்காட்சியைக் காட்டவும். அதன் மூலம்