பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தான் சுமந்த பிணம்

53




அவனைத் தன் முன்பு அழைத்துப் பேசலானான் : "அப்பா மகனே! எப்பொழுதும் உன் கை நிறையச் செலவுக்குப் பணம் கொடுத்து வருகிறேன். இதுவரை உன்னை எதிலும் நான் தடை செய்யவில்லை. ஆனால், இப்பொழுது நான் கேள்விப்பட்ட செய்தியிலிருந்து எனக்கு மிகவும் அவமான மாயிருக்கிறது. நீ எந்தப் பெண்ணிடம் முறை தவறி நடந்தாயோ, அவளை உடனே நீயே திருமணம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்துகொண்டால்தான் என் நிலங்களையும், நாம் குடியிருக்கும் இந்த வீட்டையும் உன் பெயரில் எழுதி வைப்பேன். இல்லாவிட்டால் இவைகளையெல்லாம் என் தம்பி மகனுக்குக் கொடுத்து விடப்போகிறேன். நாளைக் காலையில் இதுபற்றி உன் கருத்தை என்னிடம் தெரிவிக்கவேண்டும் "


"எவ்வளவோ நல்ல பிள்ளையாகிய என்னிடம் இப்படிப் பேசுகிறீர்களே ! அந்தப் பெண்ணை நான் மணந்துகொள்ள மாட்டேனென்று உங்களிடம் எவன் சொன்னான்” என்றான், மைந்தன்.


தந்தை உள்ளே சென்றுவிட்டார். அவர் பிடிவாத முள்ளவர் என்பதும், சொன்ன சொல்லை மாற்றமாட்டார் என்பதும் இளைஞனுக்குத் தெரியும். அவனுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவனுக்கு அந்தப் பெண் மேரியிடம் இயற்கையிலேயே காதலுண்டு. இப்பொழுதோ, பின்னரோ, அவளை மணந்துகொள்வதில் அவனுக்கு ஆட்சேபமில்லை. ஆனால், அவனுடைய தந்தை இதற்காகக் கடிந்துகொண்டு கட்டளையிட வேண்டுமா? அவளை மனந்துகொள்ளாவிட்டால் சொத்தில் உரிமை இல்லை யென்று பயமுறுத்த வேண்டுமா? இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டு, அவன் மேலும் சிறிது காலம் சீட்டு, சூது, குடி ஆகியவற்றிலேயே பொழுதுபோக்க விரும்பினான். நானாகவே மேரியை மகிழ்ச்சியுடன் மனந்திருப்பேன். ஆனால், மூடத்தந்தை கட்டளையிட்டதால், திருமணத்தைப் பற்றிப் பின்னால்தான் கவனிக்கவேண்டும் ! என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.


அவன் மனம் குழப்பமடைந்திருந்தது. உதிரமும் கொதித்தது. தந்தை சொல்லுக்குக் கட்டுப்படுவதா, அதை மீறுவதா என்ற இரண்டனுள் ஒன்றை அவனால் முடிவு செய்ய இயலவில்லை. எனவே, அவன் குளிர்ந்த காற்று