பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தான் சுமந்த பிணம்

55


வீசும் இடத்திலே சிறிது நேரம் நடந்துகொண்டிருக்க எண்னிச் சாலை வழியாகச் சென்றான். அவன் கால்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. அந்த வேகத்தினால் மூளையின் கொதிப்பும் சற்றே குறைவது போல் அவனுக்குத் தோன்றிற்று. எனவே, அவன் விடாமல் நடந்துகொண்டே இருந்தான். வானத்தில் வளர்மதியின் நிலவு ஒரளவு வழி காட்டிக்கொண்டிருந்தது. ஈரவாடை, கற்றிலும் ஒரே அமைதி. அவன் தன்னந்தனியே நடந்து வெகுதூரம் சென்றுவிட்டான். அவன் புறப்பட்டு மூன்று பணி நேரம் கழிந்துவிட்டது. திடீரென்று அவன் 'அடடா! என்னையே மறந்து நெடுந்துரம் வந்துவிட்டேனே! மணி பன்னிரண்டு ஆகியிருக்கும்!' என்று சொல்லிக்கொண்டான்.

அவன் சொல்லி வாய் மூடியதும், பல குரல்கள் ஒலிப்பதையும், அநேகர் நடந்து வரும் காலோசையையும் அவன் கேட்டான். 'இந்த ஏகாந்தமான சாலையில் இந்த நடுநிசியில் எவர்கள் இப்படி வருகிறார்கள்?' என்று அவன் எண்னமிட்டான்.

அவனுக்கு எதிர்ப்பக்கத்தில் பலர் கூடிப் பேசிக் கொண்டு வருவதை அவன் உணர்ந்தான். அவர்கள் ,பேசிய மொழி ஐரிஷ் மொழியுமில்லை, ஆங்கிலமுமில்லை. ஒருவேளை ஃபிரெஞ்சு மொழியாயிருக்கலாமென்றால், அதுவுமில்லை. அவன் முன்னால் சில அடிகள் எடுத்து வைத்து நகர்ந்தான். நிலவொளியில் குள்ளமான பல உருவங்கள் தென்பட்டன. அவை அதிகக் கனமான எதையோ சுமந்து வந்துகொண்டிருந்தன.

'ஒ,எதோ! கொலைதான் நடந்திருக்கிறது! என்னையும் விடமட்டார்கள்! இவர்கள் நல்லவர்களல்லர்! ஏதோ துர்தேவதைகளாகவே இருக்கவேண்டும்!' என்று அவன் முணுமுணுத்துக்கொண்டான். அவன் தலையிலிருந்த உரோமங்களில் ஒவ்வொன்றும் எழுத்தாணிபோல் நட்டமாக எழுந்து நின்றன. அவன் உடலினுள்ளே எலும்புகள் யாவும் குலுங்கின. அவர்கள் வேகமாக அவனை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள்.

அவன் மீண்டும் அவர்களை உற்றுப்பார்த்தான்; சுமார் இருபது பேர் இருந்தனர். எல்லோரும் குள்ளமான மனிதர்கள், அவர்களுள் மூன்று அல்லது மூன்றரை அடிக்குமேல் உயரமுள்ளவரே இலர். சிலர் சாம்பல்