பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



120 இறையனார் அகப்பொருள் (களவு மகளிர், நீர் ஏயினவாறு ஒழுகுவதல்லது, “இதுகொண்டு இது செய்மின்" என்றற்குத் தக்கேமல்லேம்' என்னும்; அதற்குச் செய்யுள் : | முலைவிலை கூறல் ' என்னால் இது செய்கென் றென் சொல்ல லாமிகற் பாழிவென்ற மின்னார் அயிற்படைச் செங்கோல் விசாரிதன் வீங்கொலிநீர்த் தென்னா டெனினுங்கொள் ளார்விலை யாத்தமர் சீர்செய்வண்டு முன்னாள் மலரென் றணையுங்கண் ணேழை முகிழ்முலைக்கே.' () இதுகேட்ட தலைமகன், 'உடன்கொண்டு போவது துணிந்தே னெனினும், நிழலும் நீரும் இல்லாத அழல்வெங்கானம் ஆற்ற கில்லாள் கொல்லோ' என்னும்; என்ன, 'அன்ன வெங்கான மெனினும் எம்பெருமாட்டி நும்மொடுவரப் பெரிதும் இனிய வாம்' என்னும்; அதற்குச் செய்யுள் : ஆதரங் கூறல் * மால்புரை யானை மணிமுடி மாறன் மண் பாய்நிழற்றும் பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற கோல்புரை வெம்மையங் கானம் எனினும் அவ்வேந்தன் செய்ய வேல்புரை தண்மைய வாநும்மொ டேகினக் கொம்பினுக்கே.' () 'கழலணி போர்மன்னர் கானீர்க் கடையற் படக்கடந்த தழலணி வேல்மன்னன் சத்துரு துரந்தரன் தன்முனைபோன்று அழலணி வெம்மைய ஆயினுங் கானம் அவன்குடையின் நிழலணி தன்மைய வா நும்மொ டேகினெம் நேரிழைக்கே.' (கஎடு) அதுகேட்டு, 'ஆயின், உடன் போக்குவலித்தேன், நீ இதளை அவட்குச் சொல்லவேண்டும்' என, 'நன்று, எம்பெருமான் அருளிச்செய்தது எம்பெருமாட்டிக்கு உணர்த்துவல்' என்று, தலைமகனை வலங்கொண்டு போந்து, தலைமகளுழைச் சென்று, அவள் குறிப்பறிந்து, 'எம்பெருமாட்டி, நம்பெருமான் நம்மைத் தம்மோடு உடன் கொண்டுசெல்லக் கருதுகின்றார், நின்குறிப்பு என்னை?' என்னும்; என்றவிடத்து, உடம்படுதலும் உடம் படாதொழிதலும் என இரண்டல்லதில்லை; சென்று வழிபடு மேயெனின் நாணிலளாயினாளாம்; உடன்படாளாயின் கற்பில ளாயினாளாம்; இரண்டினுள்ளும் எத்திறத்த ளாயினாளோ எனின், நாணுக் கற்பு என்னும் இரண்டல்லவே அவள் கண் ணுள்ளன, அவற்றுள் நாணிற் கற்பு வலியுடைத்து; என்னை வலியுடையவாறு எனின், .