பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



138 இறையனார் அகப்பொருள் (களவு ‘ இவ்வகை விரைந்து கொடுத்தாரால்' என்னும் புறவுரை நோக்கியும் அருகுப. அல்லதூஉம், இறப்பச் சிறியாரும், தம்மின் மிக்கார், மகள் வேண்டிச் சென்றவிடத்தும் அருகுப. இனி, உலகியலானும் அருகுப. அல்லது, உலகியல்பல்லாவழி இவர் அருகுவதற்குச் சொல்லவேண்டுமோ என்பது; எனத், தலைமகன் வரைவு மறுக்கப்பட்டான் என்பதனை உணர்ந்த தலைமகள் ஆற்றாளா மாகத், தோழி யாய்க்கு அறத்தொடு நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடுநிற்கும்; அவள் தந்தைக்கும் தன்னை யன்மார்க்கும் அறத்தொடு நிற்கும், முன்னம்போலுஞ் சொல் லான் என்றவாறு. அவ்வாறு சொல்லுவதற்குச் செய்யுள் : அறத்தொடு நிற்றல் 'சான்றோர் வரவும் விடுத்தவர் தந்தக வும் நுமது வான் தோய் குடிமையும் நோக்கின் அல் லால்வண் பொருள் கருதின் தேன்தோய் கமழ்கண்ணிச் செம்பியன் மாறன்செங் கோன்மணந்த மீன்தோய் கடலிடம் தானும் விலையன்றிம் மெல்லியற்கே.' (உகக) 'கடையால் இதுவென்று நேரினல் லால்நறை யாற்றுவென்ற படையான் பனிமுத்த வெண்குடை வேந்தன்பைங் கொன்றைதங் சடையான் முடிமிசைத் தண்கதிர்த் திங்கள் தன் தொல்குலமா (கும் உடையான் உசிதன் உலகும் விலையன்றிவ் ஒண்ணுதற்கே.' (உக.) ' சான்றோர் வருந்திய வருத்தமும் நமது வான்தோய் வன்ன குடிமையும் நோக்கித் திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினோ நன்றே அஃதான்று, அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோடு உள்ளி விழவின் உறந்தையும் சிறிதே.' என இவ்வாறு நற்றாய் சொல்லக் கேட்டுக் கொடாது விடின், இக்குலத்துக்கு வடுவுண்டுபோலும் என உணர்வா ராவது. அதனாற் போந்த பொருள் அறத்தொடுநிலை மாட்சிப் படுவது. .