பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-ஙக) இறையனார் அகப்பொருள் 153 முள்ளுடைத்து என்றல்; ஊறு என்பது - இடையூறு, புலியானும் யானையா னுஞ் சூரரமகளிரானும் கள்ள ரானும் எண்காணும் இடையூறுடைத்து என்றல் ; அச்சம் என்பது - அஞ்சப்படுவன கண்டவிடத்து மனக்குறிப்பின்றியே அஞ்சு வது, அச்சமும் இவன்கணில்லை யென்றவாறு ; தன்னையழிதலும் என்பது- தன்கண் ஒரு துன்பம் வந்துவிடத்து எனக்காகாததோ ரொழுக்கம் எடுத்துக்கொண்டேன் எனத் தன்னை நெஞ்சினால் நோதலும் என்றவாறு ; கிழவோற்கு இல்லை யென்பது - இனை யன தலைமகற்கு இல்லை என்றவாறு. அஃதேயெனின், இவற்கு அவையுளவாய்வைத்து நினையா மையின் இல்லையோ? இல்லையாயே இல்லையோ P எனின், உளவேயெனின் நினையானாயினும் வந்து நிகழும். உலகத்து உயிர்வாழ் சாதிகளெல்லாம் தம் சாக்காடு நினைத்துச் செல் கின்றவுளவே? இல்லையன்றே; இல்லையெனினும் அவை வந்தே நிகழ்ந்துவிடும். அதுபோல இவன் நினையானாயினும் உளவாயின் நிகழவேண்டும்; இனி, இல்லையாயே யில்லையெனின், இல்லதனை இல்லையென வேண்டுவதில்லை ; என்னை, ஆகாயப்பூ இல்லை என வேண்டா, அதுபோல என்பது ; என்றார்க்கு இல்லதனையே இல்லையென்றார், இவன் உலகத்துத் தலைமகனல்லன், புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு உலகத் துத் தலைமகனாயின் இவையெல்லாம் இல்லாமையில்லை யென்பது. கிழவோற்கில்லையெனவே கிழத்திக்கும் தோழிக்கும் அவையுள என்பது பெற்றாம். அவர் ஆறு இன்னாது என்றும் இடையூறுகள் உள என்றும் அவற்றிற்கு அஞ்சுதலும், நம்பெருமான் தனக்குத் தகாத இளிவரவொழுக்கம் ஒழுகுதற்குக் காரணமாயினேமா காதே யென்று தம்மையழிதலும் உடையர் என்றவாறு. அஃதேயெனின், வயிரமுடையான் ஒருவன், வயிரம் உளு வெறியும் என்று அஞ்சான், அதுபோல இவரும் அஞ்சாதுவிடற் பாலார் பிற, அவற்கு அவையின்மையால் எனின், அதுவன்று ; பெண்மை யென்பது ஒருபொருளைப் பட்டாங்கு அறியாமை யாகலான், அவை அவற்கு இல்லையேனும் உளவாகக் கருதுப என்பது: அஃதேயெனின், மேல் இவனைப் பொருவிறந்தான் என்று போதரப்பட்டதன்றே? பட்டமையான் அச்சமும் தன்னையழிதலும் இல்லையெனக் கொள்ளாமோ ? மளத்தான் வரும் நோயெல்லாம் உணர்வின்மையான் வரும் என்பது கடா; அதற்கு விடை, இவன் ஞானத்தையும் ஒழுக்கத்தையும் விதி இழுக்கினமையாற் சிற்றறிவினார் தன்மை உண்மையான் உள கொல்லோ என்று கருதின் அவை யில்லை யென்பது போதரச் சொல்லப்பட்டது. (ஙக)