பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூகூ.) இறையனார் அகப்பொருள் 155 பதினாறாட்டைப் பிராயத்தானாய்ச் செல்வதல்லது, மற்றையன நிகழா ; உலகினோடு இத்துணை மாத்திரையே யொத்து, மற்றை விகற்பமெல்லாம் ஒவ்வா எனக் கொள்க. ஒத்து ஒவ்வாதா யன்றே செல்கின்றது என்பது. அஃதேயெனின், ' அண்ணார் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கே மூர.' (நற்றிணை, க0) என இலக்கியம் வருவன உளவாலோவெனின், அஃதில்லை மன், அஃது எய்திடினும் என்றவாறு. இனி, ஒரு திறத்தார், திங்கள் இரண்டினகம்' என்பதனைச் சொல்லுமாறு : பிறைத்திங்கள் மதித்திங்கள் என இரண்டு; அவற்றுட் பிறைத்திங்கள் முன்னொளியாய்ப் பின்னிருளாம்; மதித்திங்கள் பின்னொளியாய் முன்னிருளாம்; அவ்விரண்டுஞ் சந்தித்துநின்ற இருட்காலத்தாக என்றவாறு, அது பொருந்தாது ; என்னோ காரணமெனின், இரவுக்குறிக்கே சொல்லினமையான். அல்ல தூஉம் காலவரையறையின்றியே எஞ்ஞான்றும் இருட்டிங்கட் கண்ணே களவொழுக்கம் வேண்டப்பட்டதாம் என்பது. இனி, ஒரு சாரார், திங்களிரண்டினகம்' என்பதனை ஒருதிங் களை இரண்டு கூறிட்ட ஒரு கூறு என்று பதினைந்து நாளாகச் சொல்லும். அதுவும் பொருந்தாமை அறிந்துகொள்க. (ங..) சூத்திரம் - ந.கூ. களவினுள் தவிர்ச்சி கிழவோற் கில்லை. என்பது என்னு தலிற்றோ எனின், களவுகாலத்துத் தலைமகனது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : களவினுள் தவிர்ச்சி கிழவோற்கு இல்லை என்பது - களவு காலத்துத் தலைமகன் காரணமாக இடையிடும் இடையீடு இல்லை என்றவாறு. ' தலைமகற்கில்லை' எனவே, அருத்தாபத்தியான் தலைமகள் காரணமாக உண்டு என்பது. இன்னும், 'களவினுள் தவிர்ச்சி கிழவோற்கில்லை' என்ப தனானே கற்பினுள் தலைமகள் காரணமாக இடையீடில்லை யென்றாம். என்னை, இவன் ஒரு ஞான்று ஒருகால் அக்குறி