பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2. கற்பு - 54 பூத்திரம் - ந.ச கற்பினுள் துறவே கடிவரை வின்றே. என்பது என்னு தலிற்றோ எனின், இங்குகின்றுங் கற்பினது • இலக்கணம் உணர்த்துதல் நுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பொருள் : கற்பினுள் துறவே என்பது.- கற்பி னகத்து நீங்கும் நீக்கம் என்றவாறு. துறவு எனினும், நீக்கம் எனினும், பிரிவு எனினும், அகற்சி எனினும் ஒக்கும்; கடிவரைவு இன்றே என்பது - கடிந்து வரையப்படாது ஆசிரியர்களால் என்றவாறு, அஃதேயெனின், 'கற்பினுள் துறவே கடித லின்றே' என டவும், வரைதலின்றே' எனவும் சொல்லாது, 'கற்பினுள் துறவே * கடிவரை வின்றே' என்றது எற்றிற்கோ எனின், ஆசிரியர்களால் விலக்கவும்படாது, இத்துணைக்காலம் என்று வரையறுக்கவும் படாது என்றவாறு. எனவே, களவினகத்துப் பிரியும் பிரிவு ஒருகாலல்லது இல்லை யென்றவாறு. களவினகத்துப் பகற்குறி நிலைமைக்கண்ணும் இரவுக்குறி நிலைமைக்கண்ணும் வந்து பிரியு மாகலான் அதுவும் பல்காலும் நிகழ்தலுடைத்துப்பிற எனின், அவை யெல்லாம் ஆசிரியராற் பிரிவென்று வேண்டப்படா, ஒரு கருமநோக்கிப் பெயர்ந்தன அன்மையின். அல்லதூஉம், அவை யேயானும் வரையறைவு உடைத்தாகலான் என்பது. (க) சூத்திரம் - ஙரு M ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே. என்பது என்னு தலிற்றோ எனின், மேற் கற்புக்காலத்துப் பிரிவு பல' என்றார், அவையிற்றைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : ஓதல் என்பது - கல்வி காரணத்துப் பிரியும் பிரிவு என்றவாறு ; காவல் என்பது - நாடு காத் தற்குப் பிரியும் பிரிவு என்றவாறு ; பகைதணிவினை என்பது - (பாடம்) 1. காதலித்துப்.