பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



162 இறையனார் அகப்பொருள் (கற்பு பெறுதும்; அல்லதூஉம், உரையிற்கோடல் என்பது தந்திர உத்தியாகலானும் இருவர்க்கும் உரிய என்பது பெறுதும். ஓதற்குப் பிரிதலுறுந் தலைமகன் தோழியால் தலைமகட்குப் பிரிவுணர்த்துவிக்கும்; அதற்குச் செய்யுள் : ஓதற்பிரிவுணர்த்தல் 'மைதான் இலாததம் கல்வி மிகுத்து வருவதெண்ணிப் பொய்தான் இலாதசொல் லார்செல்வர் போலும்புல் லாதமரே செய்தார் படச்செர் நிலத்தைக் கணைமழை திண்சிலையால் பெய்தான் விசாரிதன் 'தென்னனன் னாட்டுறை பெண் அணங்கே. காவற்குப் பிரியலுறுந் தலைமகன் தோழியால் தலைமகட்குப் பிரிவுணர்த்துவிக்கும்; அதற்குச் செய்யுள் : காவற்பிரிவுணர்த்தல் ‘தேக்கிய தெண் திரை முந்நீர் இருநிலம் தீதகலக்.. காக்கிய செல்வது காதலித் தாரன்பர் காய்ந்தெதிரே ஆக்கிய வேந்தர் அமர்நா டடையத்தன் அஞ்சுடர்வாள் நோக்கிய கோன் அந்தண் கூடல் அனைய நுடங்கிடையே.' (உச0) என்பது. சூத்திரம் - க.எ வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கும் உரித்தே. என்பது என்னுதலிற்றோ எனின், பார்ப்பார்க்குப் பிரிவென்று ஓதப்பட்டது கல்வி மிகுத்தற்குப் பிரியும் பிரிவன்றே, அதுவல்லாமலும் பிறிதும் ஒரு பிரிவு உண்டென்பது உணர்த் துதல் நுதலிற்று. இதன் பொருள் : வேந்து என்பது அரசு; வினை என்பது செய்கை; இயற்கை என்பது தன்மை; பார்ப்பார்க்கும் உரித்தே என்பது பார்ப்பார்க்குங் கிழமையுடைத்து என்றவாறு. என்பதனாற் போந்த பொருள், வேந்தர் செய்வித்தற்கு உரிய சந்து பார்ப்பார்க்கும் உரித்து என்றவாறு. வேந்தர்க்குச் சந்து செய்வித்தல் உரித்து என்று மேற்சொல்லிப் போந்தாரா யினன்றே, 'வேந்துவினை இயற்கை பார்ப்பார்க்கும் உரித்தே' என்பது எனின், அது மேற்சொல்லினான். என்னை, காவல், (பாடம்.) 1. தென்புன னாடன்ன பெண்கொடியே.