பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூகூ) இறையனார் அகப்பொருள் 169 இனித், தலைமகன், வினைமுற்றிப் புகுந்து, தலைமகளோடு இனிதிருந்து, தோழிக்குச் சொல்லியதற்குச் செய்யுள் : தலைமகள் தோழிக்குக் கூறல் * மடையார் குவளை நெடுங்கண் பனிமல்க வந்துவஞ்சி இடையாள் உடனாய் இனிது கழிந்தன் றிலங்குமுத்தக் குடையான் குலமன்னன் கோனெடு மாறன் குளந்தைவென்ற படையான் பகைமுனை மேற்சென்று நீடிய பாசறையே.' (உசு.) இனிப், பொருட்குப் பிரியலுற்ற தலைமகன் தோழியால் தலைமகட்குப் பிரிவு உணர்த்துவித்தற்குச் செய்யுள் : பொருட்பிரிவுணர்த்தல் ' இல்லார் இருமையும் நன்மையெய் தாரென் றிருநிதிக்குக் கல்லார் சுரஞ்செல்வ தேநினைந் தார்நமர் காய்ந்தெரிந்த புல்லார் அவியநெல் வேலிப் பொருகணை மாரிபெய்த வில்லான் விசாரிதன் தென்புனல் நாடன்ன மெல்லியலே.' (உசுச ) அது கேட்டு ஆற்றாத் தன்மையளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியதற்குச் செய்யுள் : தலைமகள் ஆற்றதுரைத்தல் 'ஊனங் கடந்த உயர்குடை வேந்தன் உசிதன் ஒன்னார் மானங் கடந்துவல் லத்தமர் வாட்டிய கோன் படிமேல் ஈனங் கடந்தசெங் கோன் மன்னன் தெம்முனை போலெரிமேய் கானங் கடந்து சென் றோபொருள் செய்வது காதலரே.' (உசுரு ) தோழி தலைமகள் நிலைமை தலைமகற்குச் சொல்லியதற்குச் செய்யுள் : தலைவி நிலைமை தோழிசாற்றல் ‘ விரை தங்கு நீள்முடி வேந்தன் விசாரிதன் வெம்முனை போல் வரை தங்கு கானமர் செல்லும் என்றலும் வாள் நுதலாள் நிரை தங்கு சங்கம் கழலக்கண் நித்திலஞ் சிந்தமில்லா அரைதங்கு மேகலை மெல்லடி மேல்வீழ்ந் தரற்றினவே.' (உசுசு) ' மன்னேந் தியபுகழ் வாள்நெடு மாறன் தன் மாந்தை அன்ன மின்னேந் திய இடை யாய்கமர் செல்வர்வெங் கானமென்னப் பொன்னேந் திளமுலை பூந்தடங் கண்முத்தம் தந்தன போய் என்னேந் தியபுக ழீரினிச் செய்யும் இருபொருளே.' (உக எ)