பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



173 சூத்திரம்-Po) இறையனார் அகப்பொருள் என்று கூத்த நூலுடையாருஞ் சொன்னாராகலின் என்பது, அவ்வகை அறிவிக்கப்பட்ட தலைமகன் நாம் இதனை ஒருகால் நோக்கிப் போதும் என்றும் சொல்லும் ; சென்றக்கால், அவர் தங்கண் தாழ்விப்பர் என்பது. அஃதே யெனின், இப் பரத் தையரைத் தலைமகன் தலைமகளை எய்தியிருந்தே உடையனாதல், எய்தாததன் முன் உடையனாதல் இரண்டல்லது இல்லை. அவற் றுள் எய்தியிருந்தேயுடையனாயினானே யெனின், தலைமகள் குணமேயுமன்றிப் பிறவும் இன்பஞ்செய்வன உளவாகக் கருதி னானாம் ; ஆகவே, 'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலலும் ஒண்தொடி கண்ணே உள. (குறள்-ககாக) என்பதனொடு மாறுகொள்ளும் என்பது. இனித், தலைமகளை எய்தா தமுன் உடையனாயினானே யெனின், முன்னும் இவன் கற்ற காலமின்றிக் காமத்துக்கண்ணே கெழுமி வருகின்றானாம்; ஆகவே, நெறியின் வளர்ந்தான் அல்ல னாம் என்பது. மற்று என்னோ உரை எனின், தலைமகளை எய்தா தமுன்னே பரத்தையரை உடையன் என்பது. எனவே, மேற்சொல்லப் பட்ட குறை எய்தாதோ எனின், எய்தாது. குரவர்கள் இவ னறியாமையே இவனுரிமை இது எனவும், இவன் யானையும் குதிரையும் இவ்வெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்துவைத்துத் தாம் வழங்கித் துய்ப்ப என்பது. அவ் வகையே குரவர்களான் இவனுரிமை என்றே வளர்க்கப்பட்டா. ராகலான் தலைமகளை எய்துவதன் முன் உளர் என்பது.. இவன் முன்னே தன் உரிமையாவது அறிந்தவாறு என்னை எனின், தலைமகன் தலைமகளை நீங்கித் தருமமும் அருத்தமும் உள்பட்டுத் தலைமகள் மாட்டுப் போதருமிடத்து, அவர் முன் சொன்னவாறே குழலும் யாழும் தண்ணுமையும் முழவும் இயம்புப; இயம் பினவிடத்து, 'இஃது என்னை?' என்னும்; என்றக்கால், 'அது நின் உரிமை அன்றோ ' என்ப, என்றார்க்கு, 'அஃது என் உரிமை யாயினவாறு என்னை P' என்னும்; என்றவிடத்து, நின் குரவர்களான் நினக்கு உரிமையாக வகுக்கப்பட்டார்' என்ப. ஆயின் நாம் குரவரது பணி மாறுகொள்ளலாகாது' என்பதனாற் காண்டற்குச் செல்லும்; சென்றானை அவர் தங்கண் நயப்பிப்ப என்பது. இது பரத்தையிற்பிரிவு நிகழுமாறு. அஃதே யெனின், மற்றைப் பிரிவெல்லாம் வேண்டுக, ஆள்வினைமிகுதி உடைமையான்; இப்பிரிவு எற்றிற்கோ எனின்,