பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



177 சூத்திரம்-சக) இறையனார் அகப்பொருள் இனிக், கார் என்னும் இருதுக் குறித்துப் பிரிந்தான் தலை மகன்; பிரியப், பருவவரவின்கண் வேறுபட்டாள் தலைமகள்; வேறுபட, ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு, ஆற்றுவல் என் பதுபடச் சொல்லியதற்குச் செய்யுள் : 'தொழித்தார் சிறைவண் டறைகுழ லாய்கங்கை சூழ்சடைமேல் இழித்தான் மணிகண்டம் போல இருண்டன காரிகையே விழித்தார் படவிழி ஞக்கடற் கோடித்தன் வெஞ்சுடர்வாள் கழித்தான் குமரிநன் னீர்கொண் டெழுந்த கணமுகிலே.' (உ.அக) 'உளங்கொண்டு வாடின்று நட்டாற் றெதிர்ந்தார் உதிரவெள்ளம் குளங்கொண்டு தோற்பித்த கோனெடு மாறன்கை போலுங்கொண் களங்கொண்டு கார்செய்த காலைக் களவின் கவைமுகத்த (டல் இளங்கண் டகம்விட நாகத்தின் நாவொக்கும் ஈர்ம்புறவே.' (உ அs) எனவே, என் சொல்லினாளோ எனின், 'யான் ஆற்றேனா யன்று வேறுபடுகின்றது; அவர் குறித்த பருவம் வந்தது கண்டு தாம் எடுத்துக்கொண்ட பொருள் முடியாது வருவர் கொல்லோ என ஆற்றேனாயினேன்' என்பது. பனி யென்னும் இருதுக் குறித்துத் தலைமகன் பிரிய, அப் பருவ வரவின்கண் தலைமகள், ஆற்றாளாம் எனக் கவன்ற தோழிக்குச், சொல்லியதற்குச் செய்யுள் : ' சுழலும் வரிவண் டலம்பச் சொரிமதம் வாய்ப்புகரின் நழலுங் களிற்றரி கேசரி தென்புனல் நாடனையாய் கழலும் வரிவளை காக்கவந் தின்று கனலுஞ் செந்தீத் தழலுங் குளிர்ந்து பொடிப்படப்போர்க்கின்ற தாழ்பனியே.'(உ அ கூ) ' தனியார் தகைநலம் வாட்டுங்கொல் ஆற்றுக் குடிதனது குனியார் சிலையொன்றி னால்வென்ற கோன் கொங்க நாட்டகொல் கனியார் களவினன் முள்ளிற் கதிர்முத்தங் கோப்பனபோற் (லைக் பனியார் சிதர் நுனி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே.' (உ அச) இளவேனிற் பருவங்குறித்துத் தலைமகன் பிரிந்த விடத்து, அப்பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாம் எனக் கவன்ற தோழி சொல்லியதற்குச் செய்யுள் : தோழி கவன்றுரைத்தல் ‘ வானலங் கொண்டகை யான் மன்னன் மாறன் தன் மாந்தையன்னாள் தானலந் தேயப் பனியோ கழிந்தது தண்குவளைத் தேனலம் போது வளாய்வந்து தண்தென்றல் தீவிரியும் வேனலங் காலமெவ் வாறு கழியுங்கொல் மெல்லியற்கே.! (உ.அரு ) இ. அ.-12