பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சூத்திரம்-சங] இறையனார் அகப்பொருள் 179 இனி, ஒரு திறத்தார், தன்னிடத்ததே என்ப; அது சொல் லுதல் பொருந்தாது; மாண்தொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து.' (அகம் - சுசு) எனவும், வருக தில் லம்மவெஞ் சேரி சேர.' (அகம் - உஎசு) எனவும் இவை யெல்லாஞ் சான்றோர் செய்யுளுண்மையான். இனி, நிலத்து நீங்காது எனவே, ஒரூரது என்பது பெறப் பட்டது; பட்டமையான், தன்னிடத்ததாகவும் பெறும், தன் னிடத்து நீங்கிச் சேயதாகவும் பெறும் என்பது. இனி, ஓரிடத்தது என்பதனால், தலைமகன் இடம் பெரி தாகலான், தலைமகளது இடமும் பரத்தையர் சேரியும் வேறாய் நீங்கி இருக்கும்; அது தன்னுள்ளே செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் எல்லாம் உடைத்தாயிருக்கும் என்பது. (சு) சூத்திரம் - சங பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே. என்பது என்னு தலிற்றோ எனின், தலைமகன் பரத்தையிற் பிரிந்தவிடத்துத் தலைமகட்குப் பூப்பு நிகழ்ந்த காலத்துத் தலை மகன் இவ்வாறு ஒழுகும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : பரத்தையிற் பிரிந்த கிழவோன் என் பது - புறப்பெண்டிர் மாட்டுப் பிரிந்த தலைமகன் என்றவாறு; மனைவி பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும் என்பது - கிழத்தி பூப்புப் புறப்பட்ட நாண்முதற் பன்னிருநாளும் என்றவாறு; நீத்து அகன்று உறைதல் அறத்தாறு அன்றே என்பதுநீத்தும் அகன்றும் உறைதல் அறநெறியன்று என்றவாறு. எனவே, நீயாதும் அகலாதும் உறைதல் அறநெறி என்ற வாறாம்; என்பது, சொற்கேட்கும் வழியும் கூடியும் உறைக என்ற வாறு, இவ்வாறு உறைதல் செயற்பான்மையது என்றவாறு. அஃதாமாறு : தலைமகன் பரத்தையிற்பிரிந்த காலத்துத் தலைமகட்குப் பூப்புத் தோன்றிற்று; தோன்றத், தலைமகன் உணரும். எங்ங்னம் உணருமோ எனின்,. வாயில்கள் உணர்த்த உணரும் என்பது. என்னை. வாயில்கள் உணர்த்துமாறு 1. மான்றேர். 2. சேரியதாகவும். 3. என்பதனை. ம