பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



186 - 1 இறையனார் அகப்பொருள் (கற்பு இச்சூத்திரத்தைப் பருந்துவீழ்க்காடாகக் கிடந்ததென்று, களவினுள் வரைவின் பொருட்டாக என்பாரும் உளர். அது பொருத்தமன்று, என்னை, ' வரைதல் வேட்கைப் பொருள ' (இறையனார் - K.0) என்ற சூத்திரத்துள், 'அன்ன மரபிற் பிறவுந் தொகைதி' என்ற வழி அடங்கும். அல்லதூஉம், கற்பினுட் களவுகொணர்ந்து உரைத்தல் பொருந்தாது. (கசு) சூத்திரம் - ரு. உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றிற் * புலத்தல் தானே கிழவற்கும் வரையார். என்பது என்னு தலிற்றோ எனின், தலைமகட்கே உரியதோர் இலக்கணம் ஓரிடத்துத் தலைமகற்கும் உரித்து என்பது உணர்த் துதல் நுதலிற்று. இதன் பொருள் : உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன் றின் என்பது.- உணர்த்துதற்கு இடம்வாரா ஊடல் தலைமகட்கு வெளிப்பட்டு நிற்பின் என்றவாறு; புலத்தல் தானே கிழவற் கும் வரையார் என்பது- புலந்து சொல்லுதற்றன்மை தலை மகற்கும் வரையார் என்றவாறு. அது தலைமகட்கே உரித்தன்று. அவை இந்நேரத்துக்கண் தலைமகற்கும் உரிய என்றவாறு. தலைமகள் மாட்டு ஊடல் தோன்றுமிடத்து மூன்று வகை பான் ஊடல் தோன்றும், செய்தான் கொல்லோ எனவும் செய்யா நின்றான் கொல்லோ எனவும் செய்வான் கொல்லோ எனவும். அவற்றுள் செய்தான்கொல்லோ எனப் பிறத்தல் என்பது, பரத்தையைத் தேரேற்றினான், பூச்சூட்டினான், அவளோடு ஆடினான் கொல்லோ பிரிந்தான் கொல்லோ எனப் பிறப்பது. இச் செய்தான் என்பது இறந்தகாலத்துத் துணிபு பற்றி நிகழ்வது. இனி, செய்வான் கொல்லோ என்பது எதிர்காலத்துச் செய்யுங்கொல்லோ என நிகழ்வது. அவற்றுள் இறந்தகாலத்தே தான் நிகழ்ந்தது உணர்த்துதற்கு இடனுடைத்தன்று; தெற் றென அறிந்தேனல்லாதேன் எம்பெருமானை வருத்துவேனோ எனவுந் தானேயும் மீண்டு நிலையுடைத்து, பிறர் சிறிது சொல்ல வும் மீண்டும் நிலையுடைத்து, இனி, எதிர்காலத்தே நிகழ்வதும் மீண்டும் நிலையுடைத்து, தெற்றென அறிந்தேனல்லாதேன் ஒரு காலத்து நிகழ்வதெனக் கருதுதல் பொருந்தாது. என்னை,